Abstract:
மாணவர்களின் அடைவுகளை அறிந்துகொள்வதற்காக பரீட்சைகள் நடத்தப்படுகின்றன.
மாணவர்களின் ஒவ்வொரு தரத்தையும் உயர்த்தி செல்வதற்காகவே கல்வி அமைச்சினால்
சரியாக திட்டமிடப்பட்ட பாடத்திட்டத்துடன் கூடிய பொதுப் பரீட்சைகள் நடத்தப்பட்டு
வருகின்றது. ஆனால் இம்முறை ஊழுஏஐனு 19 காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதோடு
மட்டுமல்லாமல் பொதுப் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துவதிலும் சிரமம் ஏற்பட்டு
தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை மாணவர்கள் மத்தியில் பல சவால்களை
உருவாக்கிவிட்டது. இப்பரீட்சைக்கு தயாராகிய மாணவர்கள் அவர்களுடைய கற்றல்
செயற்பாட்டில் எதிர்கொண்ட சவால்களை அடையாளப்படுத்தும் முகமாக இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தை அடைந்துகொள்ள இவ்வாய்வானது
தொகைசார் அணுகுமுறையுடன் விபரிப்பு ஆய்வுமுறையை பயன்படுத்தியுள்ளது.
இவ்வாய்விற்காக கஹட்டோவிட்ட அல் பத்ரியா பாடசாலையின் 2020 ஆம் ஆண்டு கல்விப்
பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையை எழுதிய மாணவர்கள் ஆய்வு மாதிரிகளாக
எடுத்துக்கொள்ளப்பட்டனர். 55 மாணவர்கள் எழுமாறாக தெரிவு செய்யப்பட்டு
வினாக்கொத்துக்கள் வழங்கப்படுவதன் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. கொவிட் 19
காலப்பகுதியில் மிகவும் சிரமத்தோடு கல்வியை மேற்கொண்டு உளவியல் ரீதியாகவும்
தாக்கத்தை எதிர்கொண்டு மாணவர்கள் பரீட்சையை எதிர்நோக்கியுள்ளதை இவ்வாய்வு
கண்டறிந்துள்ளது. இந்நிலைக்கு மாற்றீடான கல்வியில் புதியதோர் மாற்று வழியையும்
கொண்டு வந்து மாணவர்களின் கற்கைக்கு இலகு வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்
என்பதனை இவ்வாய்வு பரிந்துரைக்கின்றது.