Abstract:
கல்விச் சமூகமயமாக்கம் என்பது கல்வியினூடாக சமூகத்திற்கு ஏற்புடைய தனி நபர்களை
உருவாக்குவதாகும். இன்று கட்டிளமைப் பருவத்தினரிடையே போதிய கல்விச்
சமூகமயமாக்கலின்மையால் சமூகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தோன்றுகின்றன.
ஆகவே கட்டிளமைப் பருவ மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்கலில் சமவயதுக் குழுக்கள்
எந்தளவில் செல்வாக்கு செலுத்துகின்றனர் என்பதைக் கண்டறிந்து கல்விச்சமூகமயமாக்கலை
மேம்படுத்துவதற்கான தீர்வாலோசனைகளையும் விதந்துரைப்புக்களையும் முன்வைப்பதே
இவ்வாய்வின் நோக்கமாக அமைகிறது. அந்த வகையில் இவ்வாய்வானது அளவை நிலை
ஆய்வாக வடிவமைக்கப்பட்டு புத்தளம் கல்வி வலயத்தின் தெற்கு கோட்டத்திலுள்ள 5
பாடசாலைகள் இலகு எழுமாற்று மற்றும் வசதி மாதிரியெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு,
தரம் 9 தொடக்கம் தரம் 13 வரை கல்வி பயிலும் மாணவர்கள் 6:1 எனும் விகிதத்தில் 100
கட்டிளமைப் பருவ மாணவர்களும், 30 ஆசிரியர்களும், 5 அதிபர்களும் மொத்தமாக 135
பேர் இவ் ஆய்வுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இங்கு ஆய்வின் சிறப்பு நோக்கங்களை
அடைந்து கொள்ளும் வகையில் ஆய்வு வினாக்கள் தயாரிக்கப்பட்டு ஆய்வுக் கருவிகள்
உருவாக்கப்பட்டுள்ளன. வினாக்கொத்தானது வெவ்வேறாகத் தயாரிக்கப்பட்டு மாணவர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டதுடன் அதிபர்களுக்கு நேர்காணல் படிவம்
வழங்கப்பட்டது. மாதிரிகளிடமிருந்து பெறப்பட்ட அளவு ரீதியான மற்றும் பண்பு ரீதியான
தரவுகள் ஆiஉசழளழகவ நுஒஉநட மென்பொருள் முறைமை மூலம் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு
வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக
நம்பகமான முடிவுகள் பெறப்பட்டு இவ்வாய்வானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த
அடிப்படையில் பெறப்பட்ட முடிவுகளுக்கமைய கட்டிளமைப்பருவ மாணவர்களின் கல்விச்
சமூகமயமாக்கலில் சமவயதுக் குழுக்களின் செல்வாக்கு அதிகமாகக் காணப்படுகிறது.
ஆனால் அவை பெரும்பாலும் நேர் மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக உள்ளது.
மாணவர்கள் தமது அதிக நேரத்தை சகாக்களுடனே கழிப்பதால் கல்வியறிவு, குழு உணர்வு,
பாலியல் கல்வியைப் பெறுவதோடு ழடெiநெ பயஅந, சினிமா நிகழ்ச்சி போன்றவற்றிலும் தமது நேரத்தை வீணடிக்கின்றனர். இதனால் அதிகளவு உள ரீதியான பிரச்சினைகளுக்கும்
உட்படுகின்றனர். பாடசாலையில் சமூகத் திறன்களையும், உணர்வுகளையும் மேம்படுத்தும்
எந்த செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படாமையால் மாணவர்கள் சிறந்த கல்விச்
சமூகமயமப்படுத்தலை பெறத் தவறுவதோடு இள வயதிலேயே போதை, களவு, பொய்
போன்ற சமூக முரண்பாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே
சமவயதுக்குழுக்களிடையே சிறந்த கல்விச் சமூகமயமாக்கலை ஏற்படுத்துவதற்கு பாடசாலை
மட்டத்தில் தலைமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுத்தல், மாணவர்களுக்கு
சவால்களுக்கு முகங்கொடுக்கும் மனப்பாங்கை ஏற்படுத்தல், உரிய வளவாளரைக் கொண்டு
உளவியல் ஆலோசனைகளை முன்னெடுக்கும் செயற்றிட்டங்களை ஒழுங்கமைத்தல்,
பெற்றோர் கூட்டங்களை ஒழுங்குபடுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தல்
அவசியம் என்பது பற்றிய விதந்துரைப்புக்களும் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.