Abstract:
நாம் தொழிநுட்ப வசதிகள் நிறைந்த காலப்பகுதியிலே வாழ்ந்து வருகின்றோம். தொழிநுட்பம்
என்பது அன்றாட வாழ்வில் நாம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தொடர்பாடல், பண
கொடுக்கல் வாங்கல், வியாபாரம்இ பொருளாதாரம்,கல்வி போன்ற அனைத்தும் இன்றைய
நவீன யுகத்தில் டிஜிட்டலைஸ் (Digitalize ) பண்ணப்பட்டு அதனுடன் மனிதன் ஒன்றறக்
கலந்து வாழப்பழகியுள்ளான். இதனடியாக விளையாட்டுத் துறையும் டிஜிட்டலைஸ்
(Digitalize) செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் காணொளி மற்றும்
இணைய விளையாட்டுக்களினூடாக சிறுவர்களில் ஏற்படுத்தப்படும் உடல், உள, நடத்தைசார்
மாற்றங்களை என்பதை கண்டறியும் முதன்மை நோக்கில் இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது பண்புரீதியிலான விபரிப்பு ஆய்வு முறையியலைப்
பயன்படுத்துகின்றது. முதல்நிலைத் தரவுகளான காணொளி மற்றும் இணைய
விளையாட்டுக்களில் ஈடுபடும் சிறுவர்களில் 50 பேர் நேர்காணல் மூலம்
ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். இதன்போது வினாக்கொத்துஇ நேர்காணல் மற்றும் அவதானம்
என்பவற்றை மையமாகக் கொண்டு தரவுகள் பெறப்பட்டன. இரண்டாம் ;நிலைத்தரவுகளாக
முன்னைய ஆய்வுக் கட்டுரைகள்இ சஞ்சிகைகள்இ இணையக் கட்டுரைகள் ஆகியவற்றின்
மூலமும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. பெறப்பட்ட தரவுகள்
micro soft Excelமென்பொருளைப் பயன்படுத்தி விபரணப் பகுப்பாய்வு மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
இவ் ஆய்வின் கண்டறிதல்களாக: ஆய்வுப் பிரதேசத்தில் காணொளி மற்றும் இணைய விளையாட்டுக்களில்
ஈடுபடும் சிறுவர்களில் அதிகமானோர் தங்களது பொழுதுபோக்கிற்காக இவற்றுள் ஈடுபடுகின்றனர்.
சிறுசிறு இன்பங்களுக்காக குறிப்பாக நேரத்தை கடத்துவதற்குஇ அதிகமான
நண்பர்கள் விளையாடுவதனால் அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு போன்ற பல
காரணங்களாலும் அவர்கள் இவ்விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சமவயது
நண்பர்களுடன் மாத்திரம் சேர்ந்து கதைக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். அதிலும்
குறிப்பாக விளையாட்டுடன் தொடர்பான கலந்துரையாடல்களையே நண்பர்களுடன் கலந்துரையாடுபவர்களாக இருக்கின்றனர். மேலும்online இல் படிப்பதாகக் கூறி தனது ஓய்வு
நேரத்தை கழிப்பதற்காக வேண்டி காணொளி மற்றும் இணைய விளையாட்டுக்களில்
ஈடுபடுகின்றனர். இவ்விளையாட்டுக்களில் வரும் புதிய புதிய நுட்பங்களை அறிந்து
கொள்வதற்காக பல video பார்த்து அறிந்து கொள்வதில் அதிக ஆர்வத்தோடு
ஈடுபடுவதினை கண்டறிய முடிந்தது. மேலும் அவர்கள் இவ்விளையாட்டுக்களில் அடிமைப்பட்டு
இருப்பதனையும் அதனூடாக அவர்களிடையே உடல், உள, நடத்தைசார் மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளன என்பதையும் இவ் ஆய்வு கண்டறிந்துள்ளது.