Abstract:
ஆளுமை எனப்படுவது ஒரு குறிப்பிட்ட தனி
நபரிடமிருந்து வேறுபடுத்த முடியாததும் விஷேடமானதும் நிலையான நடத்தையும் கொண்ட
ஒரு பரந்த அமைப்பாகும். அந்த வகையில்; ஆரம்பப்பிரிவு மாணவர்களின் ஆளுமையை
விருத்தி செய்வதில் பெற்றோரின் பங்களிப்பைக் கண்டறிந்து அதனை மேம்படுத்துவதற்கான
பரிந்துரைகளை முன்வைப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். அந்த அடிப்படையில் பிள்ளை
தாயின் வயிற்றில் பிறந்ததிலிருந்து பாடசாலை செல்லும் வரை பெற்றோரின் வளர்ப்பு முறை
அப்பிள்ளையின் ஆளுமையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்றைய நவீன
காலகட்டத்தில் பிள்ளைகள் பெற்றோரின் தொழில். குடும்பப் பருமன், பெற்றோரின் வகிபங்கு,
குடும்பத்தின் அமைப்பு போன்றன பிள்ளைகளுடைய ஆளுமையை பெரிதும் பாதிக்கின்றன.
இது அவர்களுடைய எதிர்கால வாழ்வையும் பாதிப்பதாக இருப்பதால் பிள்ளைகளுடைய
வளர்ப்பிலும் ஆளுமை விருத்தியிலும் பெற்றோரின் பங்களிப்பைக் கண்டறிவது காலத்தின்
தேவையாக உள்ளது. அந்த வகையில் இவ்வாய்வானது அளவை நிலை ஆய்வாக
வடிவமைக்கப்பட்டு புத்தளம் மாவட்டத்தின் தெற்கு கோட்டத்திலுள்ள 21 தமிழ் மொழி மூலப்
பாடசாலைகளிலிருந்து 1ஊ மற்றும் வுலிந ஐஐ உள்ளடங்கலான 5 பாடசாலைகள் இலகு
எழுமாற்று மற்றும் வசதி மாதிரியெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு, தரம் 1 தொடக்கம்
தரம் 5 வரை கல்வி பயிலும் 1148 ஆரம்பப்பிரிவு மாணவரிலிருந்து 1:10 விகிதத்தில் 115
மாணவர்களும், 60 பெற்றோர்களும், 15 ஆசிரியர்களும் இவ் ஆய்வுக்காகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர். இங்கு ஆய்வின் சிறப்பு நோக்கங்களை அடைந்து கொள்ளும்
வகையில் வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் போன்ற முதலாம் நிலைத் தரவுகள்
மற்றும் ஆசிரியர் மதிப்பீட்டு படிவங்கள், கிராம சேவக அறிக்கைகள், சஞ்சிகைகள், ஆய்வுக்
கட்டுரைகள், நூல்கள் போன்ற இரண்டாம் நிலைத் தரவுகளிலிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு
ஆய்வுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாதிரிகளிடமிருந்து பெறப்பட்ட அளவு ரீதியான
மற்றும் பண்பு ரீதியான தரவுகள் ஆiஉசழளழகவ நுஒஉநட மென்பொருள் முறைமை மூலம்
பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளும்
மேற்கொள்ளப்பட்டு இறுதியாக முடிவுகள் பெறப்பட்டு இவ்வாய்வானதுPசழஅழவiபெ
முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் பெறப்பட்ட முடிவுகளுக்கமைய இன்று
பிள்ளைகளுடைய ஆளுமை விருத்தியில் பெற்றோரின் பங்களிப்பு மிகவும் குறைவாக
காணப்படுகிறது. பெற்றோரின் தொழில், பிள்ளைகளோடு அதிக நேரம் செலவழிக்காமை,
பிள்ளைகளை விட்டு பிரிந்திருத்தல், பிள்ளைகள் மீது அதிக அன்பு காட்டுதல், சுதந்திரம்
வழங்குதல், பிள்ளைகள் மீது அதிக அக்கறை காட்டாமை போன்ற பல்வேறுபட்ட காரணிகள்
இங்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன. எனவே பிள்ளைகளை சிறந்த
ஆளுமைவாதிகளாக உருவாக்க பெற்றோர் தமது பிள்ளைகளுடன் அதிக நேரம்
செலவழித்தல், பிள்ளைகளுடன் நல்ல முறையில் உறவாடல், அவர்களுடைய தேவைகளை
நிறைவு செய்தல் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் சிறந்த அறிவுடையவர்களாக
வளர வேண்டும் என்பதை மாத்திரம் விரும்புவது மாத்திரமன்றி அவர்களுடைய
தேவைகளையறிந்து அவர்களுடைய ஆளுமையை விருத்தி செய்வது தமது வளர்ப்பிலே
தங்கியுள்ளதென்பதை அறிந்து செயற்படுதல் வேண்டும் என்ற விதப்புரைகளும்
முன்வைக்கப்பட்டன