dc.description.abstract |
கல்வி ஒன்றே இந்த உலகை மாற்றக்கூடிய சக்திவாய்ந்த ஆயுதமாகும், இன்றைய காலத்தில்
மனிதன் சமூகத்தில் மதிக்கப்படவும், உயர்ந்தவனாக எண்ணக்கூடியதும் கல்வி
மாத்திரமேயாகும். ஒருவனிடத்தில் கல்வியும், ஒழுக்கமும் இணைந்து காணப்பட்டாலேயே
அவனுடைய கல்விக்கு மதிப்புக்கிடைக்கும். இந்த வகையில் இவ் ஆய்வானது “பாடசாலை
இடைவிலகலும் அதற்கான காரணங்களும் - அடம்பன் பிரதேசத்தின் சொர்ணபுரி கிராமத்தை
மையப்படுத்திய ஆய்வு எனும் தலைப்பில் அமையப்பெற்றுள்ளது. இவ்வாய்வானது
மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுவதற்கான காரணங்களைக் கண்டறிதல்,
மற்றும் மாணவர்களின் பாடசாலை இடைவிலகலைக் குறைப்பதற்கான ஆலோசனைகளை
முன்வைத்தல் எனும் இரு நோக்கங்களைக் கொண்டு ஆய்வில் முதலாம் நிலைத்தரவுகளாக
(2015-2019) காலப்பகுதியில் சொர்ணபுரி பாடசாலையிலிருந்து இடை விலகிய 09
மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், இடைவிலகிய மாணவர்களது பெற்றோர்கள், சமூகத்தில்
முக்கியத்துவம் வகிக்கும் உத்தியோகத்தர்களிடமிருந்து நேர்காணல் மூலம் தரவுகள்
பெறப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகளாக சர்வதேச நிறுவனங்கள், அரச,அரச
சார்பற்ற நிறுவனங்களினால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகள், பாடசாலை இடைவிலகல்,
கல்வி தொடர்பாக எழுதப்பட்ட நூல்கள், பத்திரிகை ஆக்கங்கள், முன்னைய ஆய்வுகள்,
இணையத்தள ஆக்கங்கள், பிரதேச செயலகம், வலயக் கல்வி அலுவலகம், பாடசாலை,
கிராம சேவகர்களின் அறிக்கைகளிலிருந்தும் தகவல்கள் பெறப்பட்டு
மீளாய்விற்குட்படுத்தப்பட்டு ஆய்விற்குரிய தரவுகள் பெறப்பட்டுள்ளன. இவர்கள்
பாடசாலையை விட்டு இடைவிலகியமைக்கான காரணங்கள் இரண்டு வகையில்
கண்டறியப்பட்டது. மாணவர்களின் பெற்றோர் சார்பாக பெற்றோர் பிள்ளைகளை விட்டு
வெளிநாடு செல்லல், பெற்றோர் கல்வியறிவில் பின்னடைவு, பெற்றோர் ஊக்கமின்மை, தாய்
அல்லது தந்தையின் இறப்பு, தாய் தந்தை பிரிந்து வாழ்தல், குடும்ப வருமானம் குறைவு,
இடப்பெயர்வு என்பன கண்டுகொள்ளப்பட்டது. மாணவர்கள் சார்பாக கல்வியில்
விருப்பமின்மை, சகபாடிகளின் சேர்க்கை, இளவயதில் குடும்பத்திறகாக உழைக்க வேண்டிய
நிலை என்பன இனங்காணப்பட்டு இவ்வாறு இனங்காணப்பட்ட இடைவிலகல் காரணங்களுக்கு
இடைவிலகலைக் குறைப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |