Abstract:
கண்டி மாவட்டத்தில் தெனுவர கல்வி வலயத்திற்குட்பட்ட தெஹிஅங்க
அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் பல்கலைக்கழக உள்நுழைவில் ஆண் மாணவர்கள்
பெரும் பின்னடைவினை எதிர்நோக்குகின்றனர். கடந்த ஐந்து வருட காலமாக பல்கலைக்கழக
அனுமதியில் ஆண் மாணவர்களின் தெரிவு வீதமானது மிகப்பின்னடைவினை
எதிர்நோக்கியுள்ளது. அதற்கான காரணங்களை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை
முன்வைப்பதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இவ் ஆய்வினை மேற்கொள்வதற்காக முதலாம்
நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டன. நேர்காணல்,
குழுக்கலந்துரையாடல் என்பன முதலாம் நிலைத் தரவுகளாகவும் பாடசாலை புள்ளிவிபர
அறிக்கை, இணையதளம், சஞ்சிகைகள், அதனுடன் தொடர்புடைய ஆய்வுகளும் இரண்டாம்
நிலைத் தரவுகளாகவும் பயன்படுத்தப்பட்டு அளவுசார் மற்றும் பண்புசார் ஆய்வு முறையில்
அளவை நிலை ஆய்வு முறைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து ஆய்வு
பிரதேசத்தில் கல்வி கற்ற ஆண் மாணவர்கள் பல்கலைக்கழக உள்நுழைவு பெறாமைக்கான
காரணங்களாக ஆண் மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் மற்றும் அதில் உள்ள கற்கைநெறி
தொடர்பான அறிவின்மை, உயர்தரம் படித்தால் போதும் என்ற உணர்வு, ஆசிரியர்களை
பயிற்றுவிப்பதற்கும், இற்றைப்படுத்துவதற்கும் உரிய பயிற்சிகள் மிகவும் குறைவாகவே
வழங்கப்படுகின்றமை, தனிப்பட்ட உளவியல் ரீதியான பிரச்சினைகள் போன்ற பல்வேறு
காரணங்கள் கண்டறியப்பட்டன. இவற்றுக்கான தீர்வுகளாக அரசு வறிய மாணவர்களை
இனங்கண்டு அவர்களுக்கு நிதி உதவி வழங்குதல், பல்கலைக்கழக கல்வி தொடர்பாக
மாணவர் மத்தியில் ஊக்கத்தினையும், சிறந்த அபிப்ராயத்தினையும் ஏற்படுத்தல், சமூகப் பற்று
அதிகரிக்க பெற்றோரும், பாடசாலையும் மாணவர்களை கண்காணிப்புடன் சமூக பணிகளில்
ஈடுபடுத்த வேண்டும் போன்ற பல்வேறு பரிந்துரைகளின் மூலம் ஆய்வுப் பிரதேசப்
பிரச்சினைகளுக்கு ஓரளவேனும் தீர்வினை பெற முடியும் என்பதோடு இவ் ஆய்வானது
எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படும் போது வேறுபட்ட பெறுபேறுகள் கிடைக்க வழிவகைகள்
உண்டு.