Abstract:
ஊழஎனை - 19 காலப்பகுதியைப் பொறுத்தவரை கல்வியானது இணையவழிக்
கற்றல் முறையில் புதிய போக்காக உருவெடுத்துள்ளது. இந்த பின்னணியில் பல்கலைக்கழக
மாணவர்களின் கல்வியும் நிகழ்நிலைக் கற்கையினூடாகவே மேற்கொள்ளப்படுகின்றது.
இந்நிலையில்; பல்கலைக்கழக மாணவர்களின் பொழுதுபோக்கு நிலமைகளில் ஏற்பட்டுள்ள
மாற்றங்கள் காரணமாக இம்மாணவர்களின் பொழுதுபோக்கு வி;டயங்கள் இவர்கள் மத்தியில்
எத்தகைய செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது? என்பதனை ஆய்வுப்பிரச்சினையாக
கொண்டுள்ளது. இவ்வாய்வு இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக்
கற்கைகள் மற்றும் அரபு மொழிப்பீடத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள் ஊழஎனை-19
காலப்பகுதியில் அவர்களினுடைய ஓய்வு நேரத்தினை எவ்வாறு பயன்படுத்துகின்றனர்
என்பதனை கண்டறிதலை நோக்கமாக தன்னுள் கொண்டுள்ளது. இவ் ஆய்வானது குறித்த
பீட மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஓய்வு நேரத்தின் போது திறன்பட
பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கும் வகையில் முக்கியத்துவம்
வாய்ந்ததாக காணப்படுகின்றது. இவ் ஆய்வானது அளவுசார் தரவுகளை அடிப்படையாகக்
கொண்டு அமையப் பெற்றுள்ளது. இதற்காக முதலாம் நிலைத் தரவுகளும் இரண்டாம்
நிலைத் தரவுகளும் சேகரிக்கப்பட்டன. இவ்வாய்வில் பின்வரும் ஆய்வு நுட்பங்கள்
கையாளப்பட்டன. முதலாம் நிலைத் தரவுகளைப் பெறுவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட
வினாக்கொத்து வாட்சப் வழியாக கூகுள் படிவத்தில் அனுப்பப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன.
இரண்டாம் நிலைத் தரவுகளைச் சேகரிப்பதற்காக ஆய்வுக் கட்டுரைகள்இ நூல்கள்இ
சஞ்சிகைகள்இ இணையத்தளம் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாய்விற்கான
மாதிரிகளாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும்
அரபு மொழி பீட மாணவர்கள் ஆய்வுக்காகத் தெரிவு செய்யப்பட்டனர். இப்பீடத்திலிருந்து
ஆய்வுக்காக முதலாம்இ இரண்டாம்இ மூன்றாம் மற்றும் நான்காம் வருட ஆண்கள்இ பெண்கள்
உட்பட 100 மாணவர்கள் எழுமாறாக தெரிவு செய்யப்பட்டனர். இப்பீட மாணவர்கள்
இருபாலாரினதும் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு 70 பெண் மாணவர்களும் 30
ஆண் மாணவர்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். இப்பீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் பிரிவு
மற்றும் அரபு மொழிக் கற்கைகள் பிரிவு இவ்விரண்டிலிருந்தும் மாணவர்கள் சமனற்ற
எண்ணிக்கையில்; தெரிவுசெய்யப்பட்டனர். பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்காக
ஆiஉசழளழகவ நுஒஉநடமென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வின் பிரதான
கண்டுபிடிப்பாகஇ இப் பீட மாணவர்களுள் அதிகமானோர் பல்கலைக்கழக வளாகத்தினில்
இருந்த போதுஇ குறைந்த வீதத்தில் ஓய்வு நேரம் காணப்பட்டாலும்; அவர்கள் தமது பொழுது போக்கு நேரங்களை சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர். தற்போதைய நிலையில் ஓய்வு நேரம்
அதிகமாக காணப்பட்டாலும் அதை குறைந்த வீதத்தில் கற்றலுக்காக பயன்படுத்துகின்றனர்.
பல்கலைக்கழகத்தின் சூழல்இ ஏனைய பொழுதுபோக்கு வசதி வாய்ப்புக்கள்இ உள திருப்தி
முதலியவை தற்போதைய சூழலில் காணப்படாமையும் அனைத்து நடவடிக்கைகளும்
இணையத்தளத்தினூடாக மேற்கொள்ள வேண்டியமை மற்றும் வீட்டுச் சூழலில் கற்றல்
நடவடிக்கைகளை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான சரியான வழிகாட்டல்கள்
இல்லாமை காணப்படுகின்றமையினாலும் அவர்களின் ஓய்வு நேரத்தினை முறையாக
பயன்படுத்த முடியாதுள்ளது. எனவே இத்தகைய சூழ்நிலைகளை மாற்றியமைத்து
மாணவர்களை பொழுதுபோக்கு நேரங்களில் கல்விசார் நடவடிக்கைகளை ஆர்வத்துடன்
ஈடுபடுத்தக்கூடிய வகையில் வழிகாட்டல்கள் நுட்பங்கள் போன்றவற்றை
வடிவமைத்துக்கொடுத்தல் வேண்டும்