Abstract:
இன்றைய காலகட்டத்தில் கருத்துக்கணிப்பிற்காக கல்வி, ஆய்வு, பொருளாதாரம், அரசியல்,
சமூகம் என்ற அனைத்து துறைகளிலும் தரவுகள் சேகரிக்கப்பட்டு முடிவுகள் பெறப்படுகின்றன.
அந்தவகையில் இலகுவான முறையில் குறுகிய நேரத்திற்குள் நேர விரயமின்றி தரவு
சேகரிப்பு வழியாக கூகுள் படிவங்கள் காணப்படுகின்றன. இந்தவகையில், கூகிள்
படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பான பல்கலைக்கழக மாணவர்களின் மனோநிலையை
அடையாளப்படுத்துதல். இவ்வாய்விற்காக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த 220 மாணவ, மாணவிகள் எழுமாறாக ஆய்வு மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.
முதலாம் நிலைத்தரவுகள் வினாக்கொத்து மற்றும் அவதானம் மூலமும், இரண்டாம்
நிலைத்தரவுகள் ஆய்வுக்கட்டுரைகள், இணையக் கட்டுரைகள் என்பன மூலமும் தரவுகள்
சேகரிக்கப்பட்டன. ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்கள் கூகுள் போம் தரவுகள் சேகரிப்பிற்கு ஒரு
சிறந்த வழிமுறை எனக்குறிப்பிட்டு ஓரளவான நம்பகத் தன்மையான தரவுகள்
கிடைக்கப்பெறுகின்றன என நம்புகின்றனர். அதேநேரம் சிலர் கூகுள் படிவங்களை
ஆர்வத்துடனும் இன்னும் சிலர் பொடுபோக்காகவும் விருப்பமின்மையுடனும்
பூரணப்படுத்துகின்றார்கள் என்பதையும் இவ்வாய்வு அடையாளப்படுத்தப்படுகின்றது. மேலும்
தரவுகள் சேகரிப்பிற்கு கூகுள் படிவத்தை விட நேரடியாக பதிலளிப்பதே திருப்தியான
மனநிலையை தருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆயினும் தற்போதைய சூழ்நிலைகளின்
காரணமாகவும், இலகுவாக, விரைவில் தரவு சேகரிப்பிற்கு கூகுள் படிவங்கள் மூலம்
பதிலளிப்பதை திருப்தியாகவும் உணர்கின்றனர் என்பன இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளன.