Abstract:
இஸ்லாம் மார்க்கமானது உலக மக்கள் அனைவரையும் நெறிப்படுத்த
வந்த பூரணத்துவம் மிக்க ஒரு மார்க்கமாகும். அம்மார்க்கம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு
குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின்; தொகுப்பான ஹதீஸ் மூலாதாரத்தினையும்
அடிப்படையாகக் கொண்டு வாழ்கிறது. அத்தகைய சமூகத்தில் குடும்ப அலகு என்பது
முக்கியமானதாகும். அக்குடும்ப உறவுகள் திருமணத்தினூடாகக் கட்டமைக்கப்படுகின்றன.
அக்குடும்ப விருத்தியின் பேறாக மக்கட்பேறு கிடைக்கின்றது. இத்தகைய குடும்ப
உறுப்பினர்களின் தனிமனித, சமூக ஒழுக்கங்கள் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் முதலிய
இஸ்லாமிய உயர்ந்த இலக்கியங்களில் நல்லறங்களாக வலியுறுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு
வலியுறுத்தும் குடும்ப உறுப்பினர்களின் கடமைகளை ஆராய்ந்து, அவை இல்லறவாழ்விற்கு
எவ்வகையில் துணைசெய்கின்றன என்பதை இஸ்லாமிய இலக்கியங்களின் வழி நிறுவதே
இவ்வாய்வின் நோக்காகும். இஸ்லாம் மார்க்கத்தினைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு குடும்ப
உறுப்பினர்களும் தம் இல்லறவியல் கடமைகளை இஸ்லாமிய ஒழுக்கத்தின் வழி வாழ்ந்து
நிறைவேற்றினால் சொர்க்கத்தை அடையலாம் என்ற உயர்ந்த இலட்சியம், ஆய்வு முடிவாகக்
கூறப்பட்டுள்ளது. இவ்வாய்விற்குரிய தரவுகளாக அல்குர்ஆன், ஹதீஸ் முதலியவற்றுடன்
இஸ்லாமியக் கட்டுரை நூல்கள், இதழ்கள், மின்னூடகக் கருத்துக்கள் போன்றவையும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வானது இஸ்லாமியச் சமூக ஆய்வாளர்கள், சமூக
அமைப்புக்கள், குடும்ப ஆலோசனை வழிகாட்டல் அலுவலர்கள் முதலியோருக்கு,
ஆய்வுகளை மேற்கொள்ள மேலதிக ஆய்வுத்தரவாக அமையும் என நம்பலாம்.