Abstract:
மனித வாழ்வின் அனைத்துச் செயற்பாடுகளும் நேரத்தை மையமாக வைத்தே அமைந்துள்ளன. மனிதன் தனது
ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் இழைப்பாறுவதற்காகவும் காலத்தின் ஒரு பகுதியை ஓய்வுக்காக ஒதுக்கிக்
கொள்கிறான். இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியின் பின்னணியில் ஓய்வு நேரத்தை கழிப்பதெற்கென பல்வேறான
பொழுதுபோக்கு விடயங்கள் வளர்ந்து வருவதுடன் அதன் பயன்பாடும் அதிகரித்துள்ளன. இந்தவகையில்
இஸ்லாம் ஓய்வு நேரத்திற்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தையும், பொழுது போக்கு அம்சங்களில் இஸ்லாம்
கூறியுள்ள வரையறைகளையும் கண்டறியும் நோக்கில் இவ்வாய்வு, பண்பு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான தரவுகள் நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள், மற்றும் இணையத்தளம் என்பவற்றைக்
கொண்டு பெறப்பட்டுள்ளதுடன் முடிவுகளாக, ஓய்வு என்பது இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள
அமானிதம், இறைவனே இக்காலத்தையும் வாழ்வையும் தோற்றுவித்துள்ளான், அவனால் வழங்கப்பட்டுள்ள இது
மனித வாழ்வையும் இறை நம்பிக்கையையும் ஒன்றிணைப்பதாகவே காணப்படுகின்றது. ஆகவே அதற்கான
பாதைகளை இஸ்லாம் சொல்லியதுடன் மட்டுமன்றி நபி (ஸல்) அவர்களினதும் ஸஹாபாக்களினதும் வாழ்வின்
மூலம் அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளது. அந்த வகையில் பல கேளிக்கைகளையும் மனிதனுக்கு தீமை
பயப்பதையும் விட்டு விலக்கி பொழுதுபோக்கு அம்சங்களாக வணக்கவழிபாடுகளில் ஈடுபடல், இயற்கையை
ரசித்தல், நண்பர்களுடனும் குடும்பத்துடனும் இணைந்து பயணங்கள் மேற்கொள்ளல், நூல்கள் வாசித்தல் பேன்ற
செயற்பாடுகளை பொழுதுபோக்கு அம்சங்களாக வரையறை செய்வதுடன் அதனை ஏற்று வாழ்வதால் மனிதன்
இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைவான் என்பன இவ்வாய்வினூடாக கூறப்படுகின்றன.