Abstract:
சமூகத்தில் காணப்படக்கூடிய பல்வேறு கருத்தியல்களில் ஒன்றான பெண்ணியல் வாத
சிந்தனையானது சமூகத்தில் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நோக்கோடு
தோற்றம் பெற்றது. அவற்றில் 18 ம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில்
தோன்றிய பெண்ணிலைவாத கருத்துக்கள் தாராண்மை பெண்ணிலைவாதம் எனும்
பிரிவிலடங்கும். தாரண்மை பெண்ணியல்வாதம் என்பது பெண்ணிய சிந்தனையில் ஒரு
வலுவான அரசியல் நீரோட்டமாக காணப்படுவதோடு, அது சுதந்திரம், சமத்துவம்,பெண்களின்
தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான சுயாட்சியை பாதுகாப்பதையும் நோக்கமாகக்
கொண்டுள்ளது. அந்தவகையில் பெண்ணியல் வாதம் குறித்தும் பெண்ணியல்வாதிகள்
குறித்தும் பல்வேறு ஆய்வுகள், பல்வேறு கண்ணோட்டங்களின் அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளன. அவற்றில் இவ்வாய்வானது ஆயசல றுழடடளவழநெஉசயகவ
உடைய தாராண்மை பெண்ணியல் வாத கருத்துக்களை இஸ்லாமிய கண்ணோட்டத்தின்
அடிப்படையில் ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில்,
ஆய்வுலகில் ஆயசல றுழடடளவழநெஉசயகவ உடைய கருத்துக்கள் இஸ்லாமிய கண்ணோட்டத்தின்
அடிப்படையில் பெரும்பாலும் நோக்கப்பட வில்லை.எனவே ஆய்வுலகில் காணப்படும்
இடைவெளியை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது ஒரு பண்பு ரீதியிலான ஆய்வாகும். இதற்காக வேண்டி
இரண்டாம் நிலை தரவுகள் பயன்படுத்தப்பட்டன. அந்த வகையில் பல்வேறு ஆய்வுக்
கட்டுரைகள், இணையதளங்கள், புத்தகங்கள் போன்றவற்றிலிருந்து தகவல்கள்
சேகரிக்கப்பட்டு அவை தொகுத்தறி முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள்
முன்வைக்கப்பட்டுள்ளன.இந்த ஆய்வின் மூலமாக தாராண்மை பெண்ணியல் வாதம் பற்றிய
ஆயசல றுழடடளவழநெஉசயகவ உடைய பெரும்பாலான கருத்துக்கள் இஸ்லாத்தின் பெண்கள்
தொடர்பான கருத்துக்களோடு பெரும்பாலும் ஒத்துப்போகும் தன்மையையும் சிலநேரங்களில்
வரையறையுடன் ஒத்துப்போகும் தன்மையையும் கொண்ட பெண்ணியல்வாத கருத்தாக
காணப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.இவ்வாறான பெண்ணியல் வாத கருத்துக்கள்
இஸ்லாமிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் பார்க்கப்படுவதன் மூலம் எதிர்கால உலகில்
பெண்களை வலுப்படுத்தி, பெண்களின் செயற்பாடுகளை வினைத்திறனாகவும்
விளைத்திறனாகவும் ஆக்கிக் கொள்வதன் மூலம், உலகில் கணிசமான தொகையினராக காணப்படும் பெண்களின் மூலமும் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு இவ்வாய்வு காலத்தின்
தேவையாக காணப்படுகின்றது.