Abstract:
இன்று இலங்கை உட்பட பல்லின சமூகங்கள் வாழும் நாடுகளில்
அச்சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளும், சச்சரவுகளும், கலவரங்களும் இடம்பெற்று
வருகின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை
முறையாகப் பயனளித்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் சமயங்களின் பொதுக்
கோட்பாடுகளினூடாக இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை இலக்காகக்
கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்கால இலங்கையில் பௌத்தர்களுக்கும்
முஸ்லிம்களுக்கும் இடையிலான முறுகல் நிலையைத் தீர்ப்பதற்கு பௌத்த சமயம்
வலியுறுத்தும் ‘பஞ்ச சீலம்’ எனும் ஒழுக்கவியல் போதனையை இஸ்லாமிய
கண்ணோட்டத்தோடு ஒப்பிட்டு, இவ் ஆய்வுக் கட்டுரை விரிவாக நோக்குகின்றது. இதனூடாக
‘பஞ்ச சீல’த்தினூடாக பௌத்த மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை
ஏற்படுத்த முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளதோடு, இறுதியில் இலங்கையில் அதனை
அமுலாக்கம் செய்வதற்கான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இரண்டாம்
நிலைத்தரவுகளைக் கொண்டு, விவரண ஆய்வாக அமையப்பெற்றுள்ள இவ்வாய்வு,
இலங்கை போன்ற பல்லின நாடுகளின்; சமூக நல்லிணக்கத்திற்கு பஞ்ச சீலக் கொள்கையை
நடைமுறைப்படுத்துவதானது குறிப்பாக பௌத்த மற்றும் முஸ்லிம்களின் உறவில் நம்பிக்கை,
நாணயம், புரிந்துணர்வு, இணக்கப்பாடு, மனிதனை மதிக்கும் தன்மை, விட்டுக்கொடுப்பு
என்பன வளருவதற்கான காரணமாக அமையும் என்பதனை முடிவாகக் கொண்டுள்ளது.