dc.description.abstract |
வர்த்தக விளம்பரங்கள் தற்காலத்தில் ஒரு வியாபாரத்தில் பொருட்கள்
சேவைகளின் விற்பனையை அதிகப்படுத்துவதற்கான ஓர் அடிப்படை உத்தியாகவே
காணப்படுகின்றது. ஒரு வியாபாரத்தின் இஸ்திரத்தன்மை, முன்னேற்றம், வளர்ச்சி,
வெற்றிப்படிகளில் விளம்பரங்களின் பங்கு அளப்பரியதாகும். இன்று நாம் வாழும்
வளர்ச்சியடைந்த நாகரிக காலத்தில் வர்த்தக விளம்பரங்கள் பலவாறான பரிணாம வளர்ச்சி
பெற்றுக் காணப்படுவதை அவதானிக்கலாம். இவ்வாறான ஒரு சூழலில் வர்த்தக
விளம்பரங்கள் சம்பந்தமாக இஸ்லாம் என்ன கூறுகின்றது, வர்த்தக விளம்பரங்களுக்கு
இஸ்லாம் கூறும் வரையறைகள் என்ன? என்பதனை அனைவருக்கும் தெளிவுபடுத்துவதனை
அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆய்வு பிரதானமாக வர்த்தக விளம்பரங்கள் சம்பந்தமான இஸ்லாத்தின் நிலைப்பாடு
என்ன? மற்றும் அதன் வரையறைகள் என்ன? எனும் கேள்விகளுக்கு விடை அளிப்பதாகவே
அமைகிறது. எனவே பண்பு ரீதியான இந்த ஆய்வுக்கான தரவுகள் பிரதானமாக இரண்டாம்
நிலைத் தரவுகளாக உசூல் கலை, பிக்{ஹ கலை நூற்கள், ஹதீஸ் கிரந்தங்கள், குர்ஆன்
வசனங்கள், முன்னைய ஆய்வுகள் மற்றும் சஞ்சிகைகளில் இருந்து பெறப்பட்டு
பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் இஸ்லாமிய அடிப்படைகளில் வர்த்தக
விளம்பரங்கள் பொதுவாக அனுமதிக்கப் பட்டிருப்பதுடன் பின்வரும் உண்மைத் தன்மை,
ஏமாற்று அல்லது மோசடி, பைஉத் தஸ்ரியா போன்றவற்றை விட்டும் தவிர்ந்ததாக
காணப்படல், விளம்பரம் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒரு பொருளுக்காக அல்லாமல்
இருத்தல், ஏனையவர்களின் பொருட்களை குறை கூறாமல் இருத்தல், மற்றும் மக்களின் காம
இச்சை, கெட்ட எண்ணங்களை தூண்டாததாக இருத்தல், வீண்விரயத்தை விட்டும்
தவிர்ந்ததாக இருத்தல் போன்ற வரையறைகளைக் கூறியுள்ளது. எனவே இஸ்லாத்தை
பின்பற்றக்கூடியவர்களான நாம் ஒவ்வொருவரும் நமது வர்த்தக விளம்பரங்களையும்,
வியாபாரத்தையும் அதன் மூலமான பணமீட்டலையும் இறைவன் அனுமதித்த வகையில்
நடாத்திச் செல்ல மேற்குறிப்பிட்ட வரையறைகளை பின்பற்ற வேண்டும் என பரிந்துரை
செய்கின்றோம். |
en_US |