Abstract:
அரபு சொல்லாட்சிக் கலையில் (Rhetorical Science)
முக்கியமானவொரு கூறாக தவ்ரியா (التورية (கருதப்படுகின் றது. ஒரு வசனத்தில் இரு
பொருள்களைத் தரும் ஒரு சொல் இடம்பெற்று, அவற்றுள் வாசகர்களுக்கு பரீட்சியமற்ற
கருத்து நாடப்பட்டு இடம்பெறும் இவ்வெண்ணக்கருவானது, சூழமைவின் (Context)
அடிப்படையில் புரிந்து கொள்ளப்படுகின்றமையால், இதனை மொழியியலாளர்கள்
பொருண்மையியல் (Semantic) மற்றும் நடைமுறையியல் (Pragmatism) ஆகியவற்றுடன்
இணைந்த ஒரு அம்சமாகவும் நோக்குகின்றனர். எனவே தவ்ரியா எண்ணக்கரு இடம்பெறும்
வசனங்களை சரியாகப் புரிந்துகொள்வதற்கு, இது தொடர்பான கோட்பாடு மற்றும்
பிரயோக அறிவு இன்றியமையாததாகும். “தவ்ரியா” தொடர்பான கோட்பாட்டறிவு மற்றும்
பிரயோக அறிவு என்பவற்றுக்கிடையிலான தொடர்பு நிலையினைக் கண்டறிவதை
நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது. தென்கிழக்குப் பல்கலைக்கழக
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிபீடத்தின் அறபு மொழித் துறையை விஷேட
துறையாகத் தெரிவு செய்த 50 மாணவர்களில் 43 மாணவர்களை மையமாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது அளவுசார், பண்பு சார் தரவுகளின் படி
முன்வைக்கப்பட்ட விபரண ஆய்வு முறையியல் (Descriptive Analysis) அடிப்படையில்
அமைகிறது. கலந்துரையாடல், வினாக்கொத்து ஆகிய முதலாம் நிலை தரவு
மூலங்களையும் நூற்கள் மற்றும் ஆய்வுகள் ஆகிய இரண்டாம் நிலைத்தரவு
மூலாதாரங்களையும் தரவுகளுக்காக பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Pre –
Post Test) என்ற இரு மதிப்பீட்டு முறைகளில் வினாக்கொத்து கொடுக்கப்பட்டு தரவுகள்
சேகரிக்கப்பட்டன. எந்தவொரு கலையினது கோட்பாட்டறிவினையும் புரிவதற்கு முன் அது
சார்ந்த பிரயோக உதாரணங்களை சரியாக கையாள்வது கடினமானது எனவும்,
கோட்பாட்டறிவினை கற்றுக்கொடுத்ததன் பிற்பாடு அதனது பிரயோக உதாரணங்களை
திருப்திகரமாக கையாள முடியும் என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. தவ்ரியா
கோட்பாட்டறிவை மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே பெற்றிருந்ததுடன் ,
அவர்களில் அரபு மத்ரஸாக்களில் கற்ற ஆண் மாணவர்களே அதிகமானவர்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கதாகும். தப்ஸீர் மற்றும் ஹதீஸ் பாடங்களினூடாக தவ்ரியா பற்றிய
விளக்கத்தைப் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே பெற்றிருந்தனர். அத்துடன்
இக்கருத்தியல் தொடர்பான பிரயோக அறிவு நிலை அது தொடர்பான விளக்கத்தைப் பெற
முன்னால் மாணவர்களிடம் மிகக் குறைவாகவே இருந்தது. எனினும் அதன் பிரயோகம்
தொடர்பாக தௌிவு கொடுக்கப்பட்டதன் பிற்பாடு அது தொடர்பான போதுமான புரிதலை
மாணவர்கள் பெற்றுள்ளார்கள் என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.