Abstract:
ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டின் கல்வி தரத்தில் தங்கியுள்ளது. கீழைத்தேய,
மேலைத்தேயச் சிந்தனையாளர்கள் ஒரு பெண்ணுக்கு வழங்கப்படுகின்ற கல்வி குடும்ப
அங்கத்தவர்கள் பலருக்கு பயனளிப்பதாக கருதுகின்றனர். இந்து சமுதாய வரலாற்றில்
பெண்கல்வி ஒர் ஆய்வு என்ற தலைப்பில் அமைந்துள்ள இவ்வாய்வானது, இந்து சமூகத்தில்
பெண்களின் கல்வி வளர்ச்சி மற்றும் பெண்கள் எதிர் கொண்ட சவால்களை
வெளிக்கொணர்தல் என்பதை ஆய்வின் நோக்காகக் கொண்டு இந்த ஆய்வு
மேற்கொள்ளப்படுகிறது. இந்து மரபிலே பெண்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு
காண முயற்சிக்கப்பட்டதா? தீர்வாக இருக்குமென எதிர்ப்பார்த்த கருத்துக்கள் எவை குடும்ப
மட்டத்திலும் சமூக மட்டத்திலும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட்ட
தீர்வுகள் எவை? பெண்ணின் பிரச்சினைகளுக்கு கல்வியறிவின் வளர்ச்சி தீர்வாக
அமையுமென சிந்திக்கப்பட்டதா? ஆணிற்கு சமமாகப் பெண்ணை உயர்த்துவதற்கு
கல்வியறிவு உதவியாக அமையலாம் என்ற கருத்துக்கள் நிலவியதா போன்ற ஐயங்களுக்கு
விடை காண வேண்டியுள்ளது போன்றன ஆய்வுப்பிரச்சினையாக காணப்படுகின்றது.
இவ்வாய்வானது, விவரண ஆய்வாக அமைகிறது. பொருத்தமான சந்தர்ப்பத்தில் பகுப்பாய்வு,
ஒப்பீட்டாய்வு மற்றும் வரலாற்று ஆய்வுமுறையியல்க;டாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
இவ்வாய்வானது வேதகாலம் தொடக்கம் இருபதாம் நூற்றாண்டுவரை கொண்டுள்ளது. இந்து
சமுதாய வரலாற்றில் பெண்கல்வி வேதகாலத்தில் பெண்கல்வி, உபநிடதகாலத்தில்
பெண்கல்வி, இராமாயண காலத்தில் பெண்கல்வி, சங்ககாலத்தில் பெண்கல்வி, சங்கமருவிய
கால பெண்கல்வி, பல்லவர் காலத்தில் பெண்கல்வி, சோழர் காலத்தில் பெண்கல்வி,
விஜயநாயக்கர் காலத்தில் பெண்கல்வி, நவீன சீர்திருத்தவாதிகளின் பெண்கல்வி பற்றிய
சிந்தனை, இலங்கையில் பெண்கல்வி போன்றன இவ்வாய்வு நிலைநிறுத்துகின்றது. பெண்கள்
தொடர்பான பாரம்பாரிய ஆய்வுகள் கல்வி மற்றும் சமூகசேவை, குடும்பச்சிறப்பு என்ற
வகையிலே முன்னெடுக்கப்படுதல் பாரம்பரிய பெண்களின் சிறப்புக்களை மேலும் அறிய
உதவும். பெண்கள் தொடர்பான ஆய்வுகள் பல்வேறு துறைகள் ஊடாக பல
கோணங்கள்களில் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும். பண்டைய பெண்களின் இந்து
சமுதாயத்தில் பல்வேறுபட்ட விதங்களில் விதிக்கப்பட்ட கட்டுக்கோப்புகளுக்கு உட்பட்ட
வகையில் வாழ்ந்து சிறப்பித்தனர் என்பதை எமது இன்றைய மற்றும் அடுத்த
தலைமுறையினருக்கும் எடுத்துக்காட்டுவதற்கு இத்தைய ஆய்வுத்தேடல்களும் அவற்றின்
வெளிப்பாடுகள் உதவியவாக இவ்வாய்வு அமையும் எனலாம்.