Abstract:
இப்னு சீனாவின் மருத்துவப்பணிகள் அவரது காலத்தின் மிக முக்கியமான மருத்துவ
சாதனைகனின் உச்சத்தைக் குறிக்கின்றது. பல மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத
நோய்களை எல்லாம் குணப்படுத்தி “மருத்துவத்தின் இளவரசன்" எனப்போற்றப்படும் அலி
இப்னு சீனா பல நூற்களை எழுதியிருந்தாலும் குறிப்பாக இவரது சில நூற்களையே எம்மால்
இன்று அறிய முடியுமாயுள்ளது. அலி இப்னு சீனாஅவர்களின் மருத்துவத் துறைசார்ந்த
பங்களிப்பு பற்றிய ஓர் மதிப்பாய்வாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்பு ரீதியாக
மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வானது இரண்டாம் நிலைத் தரவுகளை மீளாய்வுசெய்து விபரிப்பு
முலம் முன்வைக்கப்பட்டுள்ளது. மருத்துவதுறையின் தந்தை என அனைவராலும் அறியப்பட்ட
இவர் மருத்துவத்தின் பல துறைகளிலும் பிரசித்திபெற்ற முன்னோடி என்பதனை இவ்வாய்வின்
முடிவிலேயே எம்மால் அறியக்கூடியதாய் இருந்தது. மேலும் பல்துறைகளில் பிரசித்திபெற்ற
இவர் இன்றைய நவீன உலகில் நோய்க்கான காரணங்கள் அதன் அறிமுகம் கட்டுப்பாட்டு
முறைகள் என்பவற்றையும் இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு மூலம் நோய்கள் கண்டறியும் நுட்பம்
போன்றவற்றை இப்னு சீனா அறிமுகப்படுத்தினாலும் மக்கள் அது பற்றிய தெளிவற்ற
நிலையிலேயே காணப்படுகின்றனர். எனவே எம் முன்னோடிகளான முஸ்லிம் அறிஞர்களின்
பங்களிப்பை இன்றைய உலகம் புரட்டிப் பார்ப்பதன் மூலம் எதிர்கால சந்ததியினரை
சேவையாளர்களாக மாற்றி அவர்களின் அறிவை தாமும் பின்பற்ற தூண்டுவதாய் இவ்
ஆய்வுஅமையும் என நம்புகின்றோம்.