Abstract:
சமயங்கள் வன்முறையையோ, விரோதத்தையோ ஒரு போதும்
வளர்க்கவில்லை. மாறாக அன்பு, கருணை, பொறுமை, சமாதானம், விட்டுக்கொடுப்பு போன்ற
அடிப்படைகளையே அனைத்து சமயங்களும் வலியுறுத்துகின்றன. இருப்பினும், இன்று தனிப்பட்ட
நபர்கள் தொடக்கம் சமூகம், தேசியம், சர்வதேசம் வரை முரண்பாடுகள் தலைதூக்கியுள்ளன.
இதற்கு அடுத்த சமயங்களின் போதனைகள் குறித்த சரியான புரதலின்மை ஓர்
அடிப்படைக்காரணமாக இருக்கின்றது. ஒவ்வொறு சமயங்களும் மனித வாழ்க்ககையை
நெறிப்படுத்துவதில் தமக்கென சில தனித்துவமான கோட்பாடுகளைக் கொண்டுள்ளன.
இருப்பினும் அவை குறித்து நேரான சிந்தனைகள் இன்மையால் சமயத்தை அடிப்படையாகக்
கொண்டு முரண்பாடுகள் ஏற்படவும் அடுத்த சமயங்கள் மீதான தவறான புரிந்துணர்வை
வளர்க்கவும் வழிசெய்கின்றது. இந்த அடிப்படையில் இவ்வாய்வானது கிறிஸ்தவம், இந்து,
இஸ்லாம், பௌத் சமயங்கள் சகவாழ்வையும் சமூக ஒற்றுமையையும் வலியுறுத்தக் கூடிய
போதனைளைக் கொண்டுள்ளனவா? என்பதை கண்டறிவதனை நோக்காகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வு நூலக ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பண்பு
அடிப்படையிலான ஆய்வு முறையாகும். இவ்வாய்வுக்கான தரவு இரண்டாம் தர
மூலாதாரங்களைப் பயன்படுத்தி பெறப்பட்டுள்ளது. சகவாழ்வினையும் சமூக ஐக்கியத்தினையும்
வலியுத்துவதில் இஸ்லாம் தனித்துவமான கோட்பாடுகளைக் கொண்டுள்ளது என்பது
கண்டறியப்பட்து. மேற்குறிப்பிட்ட சமயங்களின் போதனைளைக் கடைப்பிடிப்பதன் மூலம் உலக
சமாதானத்தை கட்டியெழுப்பி ஆரோக்கியமான சமூகத்தினைக் கட்டியெழுப்ப முடியும்.