dc.description.abstract |
மனிதகுலத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பே மொழியாகும். தமது
கருத்துக்களை, சிந்தனைகளை தனிநபர்களுக்கிடையேயும், சமூகத்திற்கிடையேயும்
பரப்புவதற்கான மிகச் சிறந்த ஊடகம் மொழியாகும். இலங்கையில் பெரும்பாலும் சிங்களம்,
தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தொடர்பாடலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. ~சர்வதேச
மொழி| என்ற வகையில் ஆங்கிலமானது இரண்டாம் மொழியாகவே கற்பிக்கப்படுகின்றது
கற்கப்படுகின்றது. இதனால் பாடசாலைக் கல்வியானது ஆங்கிலக் கல்வியை
முக்கியப்படுத்தும் நிலையமாக உள்ளது. அவ்வகையில் இரண்டாம் மொழியாக
ஆங்கிலத்தினைக் கற்றுக்கொள்வதில் மாணவர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.
இச்சவால்களை இனங்கண்டு அவற்றிற்கான தீர்வுகளை முன்வைப்பதே இவ் ஆய்வின்
நோக்கமாகும். இன்றுவரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுப் பிரதேசத்தில் இவ்வாறானதோர்
ஆய்வு இடம்பெறவில்லை என்பதால் அவ் ஆய்வு இடைவெளியை குறைநிரப்புவதில்
இவ்வாய்வு முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வாய்வானது முதலாம், இரண்டாம் தரவு
மூலாதாரங்களைப் பயன்படுத்தி அளவுசார் மற்றும் பண்புசார் ஆய்வு முறைகளை
அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் நிலை தரவுகளாக
வினாக்கொத்தும் இரண்டாம் நிலை தரவுகளாக மாணவர்களின் பெறுபேறுகள், நூல்கள்,
சஞ்சிகைகள், இணையத்தளம், ஆய்வு அறிக்கைகள், கட்டுரைகள் மூலம் தரவுகள்
பெறப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட தரவுகளில் அளவுசார் தரவுகள் MSword
மென்பொருளின் துணையுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
அடிப்படையில் ஆங்கில அறிவு போதாமை,ஏனைய பாடங்களுடன் ஒப்பிடுகையில் ஆங்கிலம்
கற்பது கடினம் என்ற மனோநிலை,வாசிப்பு, எழுதுதல், கேட்டல், பேசுதலில் காணப்படும்
சிரமங்கள், ஆங்கில இலக்கணம் கடினம்,மேலும், அநேகமான மாணவர்கள் ஆங்கிலத்தில்
ஒரு வாக்கியம் அல்லது கட்டுரையினை எழுதுகையில் அதிக பிழைகள் ஏற்படுவதற்கு
இலக்கணம் பற்றிய போதிய அறிவின் மையே காரணமாக காணப் படுகிறது. ஆங்கிலம்
கற்பதற்கான போதியளவான வளங்கள் காணப்படாமை, ஆங்கிலத்தில் பேசுவதில்
காணப்படும் சிரமங்கள், குறைந்தளவிலான புள்ளிகள் பெறுகின்றமை, முழுமையாக ஆங்கில
மொழியில் கற்பிப்பதால் விளங்கிக்கொள்ள முடியாமை, கற்பித்தலில் மாணவர்கள்
திருப்திகொள்ளாமை போன்ற காரணங்கள் இவ்வாய்வினூடாக அறியப்பட்டுள்ளன. அத்துடன்
மாணவர்கள் ஆங்கிலக் கல்வியினை விருத்தி செய்தால் அவர்கள் தம் பரீட்சைகள், கல்வி
நடவடிக்கைகள், எதிர்காலத்தை வளமாக்கக் கூடிய நடவடிக்கைகள் அனைத்தையும் வளமாக்கக் கூடிய வகையில் கொண்டு செல்ல முடியும். இவ்வாறான சில முக்கிய
விடயங்கள் இவ் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. |
en_US |