dc.description.abstract |
போதையானது தன்னிலை மறக்க செய்யும் ஓர் செயற்பாடாக இருக்கிறது.போதைப் பொருள் பாவனையானது தனிமனித சீரிழிவு, வன்முறையான குடும்ப அமைப்பு மற்றும் பல்வேறு வகையான உயிர் குடிக்கும் நோய்களுக்கும் வழி வகுக்கின்றது. இதன் அடிப்படையில் மூதூர் பிரதேச அக்கரைச்சேனை கிராமத்திலுள்ள போதை பொருட்களை அடையாளப்படுத்துவதும் போதை பொருள் பாவனையினால் ஏற்படும் நடைமுறைப் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதும் இவ்வாய்வின் நோக்கங்களாகும். பண்பு ரீதியிலான இவ்வாய்வானது முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்தியதாகும். இவ்வாய்வு பிரதேச போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ்
அதிகாரி, சமூக நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் எழுமாறாக தெரிவுசெய்யப்பட்ட (10) குடும்பங்களிடமிருந்து பெறப்பட்ட நேர்காணல் பகுப்பாய்வினையும் ஆவண
மீளாய்வினையும் மையப்படுத்தியது ஆகும். இவ்வாய்வு பிரதேசத்தில் கஞ்சா, ஹெரோயின்,அபின், பீடி, மாவா மற்றும் போதை மாத்திரை ஊசி போன்றவை அதிக அளவில்
பாவனையிலுளள் போதைப்பொருள்கள் எனவும் இப்போதைக்கு அடிமையாக உள்ள நபர்கள் சமூக நெறிபிறழ்வு, சிறுவர் துஷ்பிரயோகம், களவு என்பவற்றை மேற்கொள்வதோடு, சண்டை,
குடும்ப உடைவு மற்றும் சமூக சீரழிவுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளும் போதைப்பொருள் பாவனையானது காரணமாக அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் ஏற்படும் பிரச்சினைகளில் 90% மது பாவனைக்கு அடிமையானவர்களால் ஏற்படுகின்றது என மூதூர்பிரதேச பொலிஸ் பிரிவு அறிக்கை குறிப்பிடுகின்றது. இவ்வாய்வின் மூலம் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்துவதும் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள்பாவனையை தடுத்தல் தொடர்பான செயற்றிட்டங்கள், கருத்தரங்குகள் என்பவற்றை நிகழ்த்துவதன் மூலமும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல் மற்றும் போதைப்பொருள்பாவனையில் ஈடுபடுபவர் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான புனர்வாழ்வு மையங்கள் அமைத்தல் மூலமும் சிறப்பான சூழ்நிலையை ஏற்படுத்தித்தர முனைதல் என்பன இவ்வாய்வின் வழியே
எதிர்பார்க்கப்படுவதோடு எதிர்காலத்தில் இவ்விடயத்தில் ஆய்வை மேற்கொள்பவாருக்கு உதவுவதாகவும் இவ்வாய்வு அமைகின்றது. |
en_US |