Abstract:
இன்றைய நவீன உலகமானது விரைவான நகராக்கத்தை நோக்கி
வேகமாக நகரும் தருவாயில் பல்வேறு மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்துகொள்ள முடியாத நிலையில் தொடர்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக சேரிப்புற மக்களை பொறுத்தவரையில் இன்றளவும் தமது அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத இக்கட்டான வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். அந்தவகையில் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டில் சனத்தொகை வளமானது இன்றியமையாததாக காணப்படுவதோடு அவை நாட்டின் நகராக்கத்திலும் அதிகளவான தாக்கம் செலுத்த கூடியதாக அமைகிறது. குறிப்பாக அண்மைக் காலமாக நகரத்தை
நோக்கிய நகர்வு குறைவாக காணப்பட்டாலும் ஏற்கனவே நகரத்திலுள்ள அனைத்து மக்களும் சம அளவில் வளங்களை பகிர்ந்து கொள்கின்றனரா? என்றால் அவை கேள்விக்குறியே.
பிரதானமான இலங்கையின் கிராமத்தின் நிலையைக் காட்டிலும் நகரத்தின் சேரிகள்பின்னடைவான விருத்தியை கொண்டிருப்பது எம் நாட்டின் சமூக , உட்கட்டமைப்பு ரீதியான விருத்திற்கு பெரும் சவாலாக அமைகின்றது என்றே கூற வேண்டும். அந்தவகையில்
இத்தகைய சேரிகள் ஒன்றும் சமூகத்தில் திடீரென தோற்றிய ஒன்றல்ல இதன் தாக்கத்தையும், வாழ்வியல் அமைப்பையும் மாற்றியமைக்க அரசு, அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு
செயற்பாட்டை மேற்கொண்டாலும் இன்றளவும் இம்மக்களின் வாழ்வியல் நிலை பின்னடைவில் காணப்படுவதானது எம்சமூகத்தில் விருத்தியற்ற தனன்மையையே காண்பிக்கிறது. எனவே இச்சேரிப்புற மக்களின் அடிப்படை பிரச்சினையை கண்டறியும் பொருட்டும், எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகம் உருவாக வேண்டும் என்பதற்காக இவ்வாய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தை பொரறுத்தவரையில் சமூக, பொருளாதார ரீதியில் விருத்திய டைந்த பிரதேசமாக காணப்பட்டாலும் அங்குள்ள வளங்கள் முழுசமூகத்தையும் சென்றடைவதிலுள்ள சிக்கல் தன்மையின் காரணமாக அங்கு அதிகமான சேரிகள் தோன்றம் பெறுகின்றன. எனவே இங்குள்ள சேரிப்புற மக்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, சூழலியல் தாக்கங்களை கண்டறியும் பொருட்டு
கொழும்பு மாவட்ட சேரிப்புறத்தை மையப்படுத்திய ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்திய இவ்வாய்வானது விவரண, விளக்க முறையில்
தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்டறிய ப்பட்ட பிரதானவிடயங்களாக அதிகமாக சிறுவர் துஷ்பிரயோகம் ஏற்படல், அதிகரித்த போதைப்பாவனை பாவனை இடமாக மாற்றமடைதல், வேலையற்ற பிரச்சினை, வதிவிடப்பிரச்சனை மற்றும் ஆரோக்கியமற்ற சூழல் போன்றன பிரதான தாக்கங்களா க அமைகின்றன. இதற்கான பரிந்துரைகளாக அரசோ அரச சார்பற்ற நிறுவனமோ முறையான வீடமைப்பு திட்டத்தை
ஏற்படுத்துதல், இப்பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தை அமைத்தல், புதிய தொழிற்பேட்டைகளை அமைத்து கொடுத்தல், பெண் வலுவூட்டல் நடவடிக்கையை மேற்கொள்ளல் என்பன இறுதியில் முன்வைக்கப்பட்டுள்ளது.