Abstract:
ஓர் சமூகத்தின் முன்னேற்றம் கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற முக்கிய விடயங்களில் தங்கியுள்ளது. அந்தவகையில் இவ் ஆய்வானது, “அரசியல் அதிகாரத்தினூடாக முஸ்லிம் சமூக கல்வி, பொருளாதார, அரசியல் எழுச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் ஸ்தாபகர் மர்ஹம் அஷ்ரபின் பங்களிப்பு” என்ற தலைப்பில்அமையப்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் கங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவையைப்
பற்றியே இவ் ஆய்வு காணப்படுகின்றது. பண்புரீதியிலான ஆய்வு முறையிலமைந்த மேற்படி ஆய்வுக்கான தரவுகள் புத்தகங்கள், இணையத்தளம் மூலம் பெறப்பட்டுள்ளது. எம்.எச்.எம் அஷ்ரப்
அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளை மட்டுமன்றி அரசியல், பொருளாதார பங்களிப்புகளையும் வழங்கியுள்ளார் என்பதை மேற்படி ஆய்வின் முடிவில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாய்வானது முஸ்லிம்கள் நாட்டிற்கு எவ்வாறான சேவையை
ஆற்றியுள்ளனர் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்வோருக்கு உறுதுணையாக அமையலாம்.