Abstract:
உலகளாவிய ரீதியில் சூழலும், மனிதனும், ஏனைய உயிர்வாழ்
அங்கிகளும் பயன் பெறக்கூடிய தளமாக ஈரநிலங்கள் திகழ்கின்
றன. அதாவது நிலையாகவோ அல்லது அவ்வப்போதோ நீரினுள் அமிழ்ந்த நிலையில் காணப்படும் நிலப்பரப்புக்களே ஈரநிலங் களாகும். இலங்கையினை பொறுத்த வரையில் 41 ஈரநிலங்கள் சர்வதேசமுக்கியத்துவமுடையதாக இனங்காணப்பட்டதோடு 35 ஈரநிலங்கள் சுதேச சூழல்விஞ்ஞானிகளால் டையாளப்
படுத்தப்பட்டது. இந்த 41 ஈரநிலங்களில் 6 ஈரநிலங்கள் உலகின்
முக்கிய ஈர நிலங்களை விவேகத்துடன் கையாள்வதற்காக உருவான ரம்சார் பிரகடனத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது (மத்திய சுற்றாடல் அதிகார சபை, 2006).
என்ற வகையில் அல்லை ஈரநிலமானது இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்
பட்டதொரு பிரதேசமாகும். இப்பிரதேச மக்கள் இதனை
முறையற்ற விதத்தில் பேணுவதால் இது அண்மைக்காலமாக பெறுமதியற்று காணப்படுவதோடு மனிதர்கள் பல்வேறுபட்ட சமூக, சூழலியல், பொருளாதார ரீதியான தாக்கங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலைக்கும் உள்ளாகின்றனர். இதனடிப்ப
டையில்அல்லை ஈரநிலத்தின் முறையற்ற பேணுகையில் செல்வாக்கு செலுத்துகின்ற மானிட நடவடிக்கைகளை அடையாளங்காணல் மற்றும் அல்லை ஈரநிலத்தினால் சூழலும், உயிர்வாழ் அங்கிகளும் பயன்பெறக்கூடிய விதத்தில் முறையாக பேணுவதற்கான வினைத்திறனான ஆலோசனைகளை முன்வை
த்தல் என்பதையும் நோக்கங்களாக கொண்டு இவ் ஆய்வினை மேற்கொள்ள முதலாம் நிலைத்தரவுகளாக நேர்காணல், நேரடி அவதானம், இலக்குக்குழு கலந்துரையாடல்கள் என்பனவும் இரண்டாம் நிலைத்தரவுகளாக சம்மாந்துறை பிரதேசசெயலக, பிரதேச சபை, கமநலசேவை அறிக்கைகள், நூல்கள், இணையத் தளம் என்பனவும் பயன்படுத்தப்பட்டன. ஆய்வின் முடிவில் கழிவுகளை இடல், நாணலை எரித்தல், நெல் உற்பத்தியில் ஈடு படல், பறவைகள் வேட்டையாடப்படல், முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகள்போன்று பல்வேறு மனித நடவடிக்கைகள் அடையாளப்படுத்த பட்டதோடு இவ்வாறான மனித செயற்பாடு களை குறைத்து அவ் அல்லை ஈரநிலத்தினை முறையாக பேணுவதற்கான ஆலோசனைகளும் இவ் ஆய்வினூடாக சிறப்பாக முன்மொழியப்பட்டன.