Abstract:
மனிதனை இவ்வுலகில் படைக்கச் செய்த அல்லாஹ் அவன் சீரிய
வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக ஏனைய அனைத்தையும் அவனுக்கு துணையாக
படைத்து மனிதன் நலன் பெற வேண்டும் என நாடினான். தனது கட்டளைகளையும்
நேர்வழிகாட்டல்களையும் மனிதர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக காலத்துக்குக்
காலம் நபிமார்களையும் ரஸுல்மார்களையும் அனுப்பி வைத்தான். அவர்களினூடாக
வேதங்களையும் வேதக்கட்டளைகளையும் அருளினான். அவ்வகையில் வாழ்வின் அனைத்து
துறைகளுக்குமான வழிகாட்டல்களை அவன் வகுத்துத் தந்துள்ளான். ஒரு சம்பூரணமான
சிறந்த வாழ்க்கைத் திட்டத்தினுள்ளே மனிதனை சேர்த்து வாழச்செய்வது அவனது
நோக்கமாக இருக்கின்றது. அவ்வகையில் மனிதனது குடும்ப வாழ்வோடு தொடர்புடைய
திருமணம், விவாகரத்து, பராமரிப்பு என்பனவும் அவனது திட்டமான வழிகாட்டுதலில்
இல்லாமலில்லை. திருமணம் முடிப்பது என்பது இஸ்லாத்தைப் பொருத்தவரையில் கட்டாயக்
கடமை. அவ்வாறு நடைபெற்ற திருமணமானது கணவன் மனைவிக்கிடையில்
ஒத்துப்போகாவிடில் அல்லது வேறு ஏதேனும் தகுந்த காரணங்களுக்காக
அத்திருமணத்திலிருந்து விலக்குப் பெறுவது இஸ்லாத்தில் கூடும். அதற்கு அனுமதியுண்டு.
ஆயினும் அல்லாஹ் அனுமதிக்கப்பட்டவற்றில் தனக்கு மிக வெறுப்புக்குரியது தலாக் என
ஹதீஸ் குறிப்பிடுகின்றது. ஆயினும் தற்கால முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்துக்களின்
சடுதியான அதிகரிப்பை காணலாம். பேசித் தீர்த்துக்கொள்ள முடியுமான பிரச்சினைகளின்
போதுகூட கணவனும் மனைவியும் விவாகரத்தை மட்டுமே வேண்டி நிற்பதனை நாம்
காணக்கூடியதாக உள்ளது. இவ்வாய்வானது முதற்தர தரவுகளான நேர்காணல், அவதானம்
என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் களுத்துறை
பிரதேசத்தில் தற்காலத்தில் மிக அதிகமானோர் விவாகரத்திற்காக
விண்ணப்பித்துள்ளனர்.இதற்கான காரணங்களை கண்டறிந்து, இத்தகைய நிலைமையை
தடுப்பதற்காக எதிர்காலத்தில் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்பது தொடர்பான
முன்மொழிவுகளையும் இந்த ஆய்வு முன்வைக்கின்றது.