SEUIR Repository

அம்பாறை மாவட்ட மத்தியஸ்தசபைகளும் சமூகப் பிரச்சினைகளின் கையாள்கையும்

Show simple item record

dc.contributor.author பஹீமா, எம்.எப்.ஹஸ்மத்
dc.contributor.author சுஹிறா, எம்.வை.மின்னதுல்
dc.date.accessioned 2021-08-16T10:07:26Z
dc.date.available 2021-08-16T10:07:26Z
dc.date.issued 2021-08-04
dc.identifier.isbn 9786245736140
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5739
dc.description.abstract மக்களிடையே ஏற்படுகின்ற பிணக்குகளைத் தீர்ப்பதற்காக உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு தந்திரோபாய வழிகளை கையாண்டு வருகின்றன. உத்தியோகபூர்வமான சட்ட நீதி அமைச்சுகளால் வழங்கப்படும் நீதிமன்ற செயற்பாட்டிற்கு அப்பால் 1990 ஆம் ஆண்டுகளில் ‘பிணக்குகளை தீர்ப்பதற்கான மாற்றுவழிகள்’ Alternative Dispute Resolution- ADR எனப்படும் செயன்முறை பொதுவாக பரவலாக உலகெங்கிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறே இலங்கையிலும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நீதிச் செயன்முறைகளுக்கு அப்பால், மத்தியஸ்தம் எனும் முறைமையும் செயற்பட்டு வருகின்றது ( At -torney Generalis Department , 1990 ). அந்த வகையில் சில சமூகப் பிரச்சினைகளை மத்தியஸ்தம் செய்வதன் மூலம் பிரச்சினைகளிற்குட்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் இணக்கப்பாட்டை கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்தி வைக்கும் வகையில் தோன்றிய அமைப்பொன்றாக இது விளங்குகிறது . இவ்வகையில் சுமார் 33 வருடகாலமாக இலங்கையில் இம்மத்தியஸ்த சபைகள் செயற்பட்டுவருகின்றன. இம்மத்தியஸ்த சபைகளில் அண்மைக்காலமாக கொண்டுவரப்படுகின்ற பிரச்சினைகளும், அவற்றைத் தீர்ப்பதற்கான காலங்களும் அதிகரித்துள்ளன. இவ்வகையில், மத்தியஸ்த சபைகளிற்கு கொண்டுவரப்படுகின்ற பிரச்சினைகள் பற்றிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு அமைகின்றது. இதற்கமைய இவ்வாய்வானது மத்தியஸ்த சபைகளிற்கு அண்மைக்காலங்களில் இணக்கப்பாட்டிற்கு வருகின்ற பிரச்சினைகளின் போக்கை அடையாளப்படுத்தல், அத்தகைய பிரச்சினைகளை வகைப்படுத்தல் ஆகிய நோக்கங்களை உள்ளடக்கியுள்ளது. இதனை ஆராயும் முகமாக அளவுசார் ஆய்வு முறைமை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்விற்குவலுச்சேர்க்கும் வகையில் நூல்கள், சஞ்சிகைகள்,இணையத்தள கட்டுரைகள் மற்றும் ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வு அறிக்கைகளும், அரச ஆண்டறிக்கைகள் ஆகிய இரண்டாம் நிலைத் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்விற்கான தரவுகளைப் பெற்றுக்கொள்ள ஆய்வு மாதிரியாக, அம்பாறை மாவட்டத்தில் செயற்பட்டுவருகின்ற மத்தியஸ்தசபைகளில் நிந்தவூர்ப்பிரதேச மத்தியஸ்த சபை தெரிவு செய்யப்பட்டு, 05 வருடகாலப்பகுதிக்குள் செயற்பட்டுவருகின்ற விடயங்கள் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டன.பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் கணனித்தரவுகள் வழியாகப் குப்பாய்வுக்குட் படுத்தப்பட்டன. இவ்வாய்வின் முடிவாக, கடந்த 05 வருடங்களாக் மக்களிடையே பிணக்குகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. மத்தியஸ்த சபையின் கீழ் கொண்டுவரப்படும் அதிகளவு வழக்குகள் பணத்துடன் தொடர்பானதாக் காணப்படுகின்றன. இவற்றில் வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுடன் தொடர்புடைய பிணக்குகள் முதல் நிலையானதாகவும், இரண்டாம் மூன்றாம் நிலையில் வன்முறைசார்பிணக்குகளும் காணி நிலங்களுடனான பிணக்குகளும் காணப்படுகின்றன. எனவே அதிகரித்துவருகின்ற பிரச்சினைகளுக்கான அடிப்படைக்காரணங்களை இணங்கான்பதற்கும், அவற்றைக் குறைப்பதற்கான கொள்கைகள்உருவாக்கவேண்டும் என்பதனை இவ்வாய்வு பரிந்துரைக்கின்றது. en_US
dc.language.iso en_US en_US
dc.publisher Faculty of Islamic Studies and Arabic Language, SEUSL. en_US
dc.relation.ispartofseries 8 th International Symposium - 2021;
dc.subject மத்தியஸ்த சபை, en_US
dc.subject சமூகப்பிரச்சினைகள், en_US
dc.subject வடிவங்கள், en_US
dc.subject அண்மைக்காலப் போக்கு. en_US
dc.title அம்பாறை மாவட்ட மத்தியஸ்தசபைகளும் சமூகப் பிரச்சினைகளின் கையாள்கையும் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account