Abstract:
ஜனநாயகம், வன்முறை, மனித உரிமை என்ற சொற்பதங்கள்
தென்னாசிய பிராந்தியத்தில் அதிகம் செல்வாக்குப் பெற்றதாகும். அபிவிருத்தியினை எட்டிய பல நாடுகளில் அது நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே சாத்தியமானது.
தென்னாசிய அரசுகள் போன்ற பல்லின சமூகம் ஒன்றில் ஜனநாயகத்தினை கட்டியெழுப்புதல் என்பது சிக்கல் தன்மை வாய்ந்;ததாகும். அவ்வாறே வன்முறைக்கு பேர்போன ஒரு
பிராந்தியமாகவும் தெற்காசிய பிராந்தியம் செல்வாக்குச் செலுத்துகின்றது. மேலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இப் பிராந்தியம் தவறியுள்ளது எனலாம். பொதுமைப்பாட் டுக்கு
முரணாக வேறுபாடுகள் வெளிப்படும்போது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்பன மீறப்படுகின ;றது. இவற்றின் ஒரு வெளிப்பாடாக வன்முறையும் எழுந்து விடுகின்றது. அதிலும்
குறிப்பாக காலனித்துவ செயற்பாடுகள் உள்ளடங்கலான பல்வேறு காரணிகளின் தாக்கத்தினால் தென்னாசியாவில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை கட்டியெழுப்புவது
நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்திய யுகத்தில் தேசத்தினை கட்டியெழுப்புதல் தளர்வுற்று இருப்பதனால் புதிய தேசிய அடையாளத்தினூடாக உருவாக்கப்படும் ஐக்கியம் இந் நாடுகளின் நீண்டகால எதிர்பார்க்கையாக மட்டுமே உள்ளது.
வெற்றிகரமான தேச நிறுமானத்திற்கு உதவும் ஜனநாயக நிறுவனங்கள் பல இந்நாடுகளில் சிதைவுற்று உள்ளன. இந்த வகையில் மனித உரிமையினை பேணுதல் மற்றும்
ஜனநாயகத்தினை கட்டியெழுப்புதல் என்பன தென்னாசிய அரசுகளுக்குரிய முக்கிய பிர்ச்சினையாக மாறியுள்ளதனை அவதானிக்கலாம். ஆகவேதான் இந் நெருக்கடிகள் குறித்த
பண்புசார் முறையிலமைந்த ஒன்றாக இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.