Abstract:
உலக அரசுகளில் இன்று பிரதானமான ஓர் பேசுபொருளாக வன்்முறை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்றன காணப்பட்டன. தெற்காசிய நாடுகளுல் இலங்கையானது பல்லின சமூகக் கட்டமைப்பைக் கொண்ட ஓர் தீவாகும். இலங்கை
பெரும்பான்மை சிங்கள மக்களையும் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களையும் கொண்டமைந்த ஓர் நாடாகும். இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான மோதல்
என்பது நீண்ட கால வரலாற்றை கொண்டமைந்துள்ளது. 2009 ஆண்டு இலங்கை அரசானது ஒர் பாரிய மோதலை எதிர் கொண்டதுடன் சர்வதேச சமூகங்களுக்கு மத்தியில் விமர்சனங்களுக்கும் ஆளானது. இதனை அடுத்து நீண்ட காலத்தின் பின்னரான ஓர் பயங்கரவாதத ; தாக்குதலாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணப்படுகின்றது. இத்தாக்குதலானது 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் தலைநகரான கொழும்பிலும் கிழக்கில் முக்கிய நகரமாக விளங்கும் மட்டக்களப்பிலும் மிகவும் ஒருங்கிணைந்த அடிப்படையிலும் திட்டமிடப்பட்ட அடிப்படையிலும் தற்கொலைத்
தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான காரணம் தொடர்பில் பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. இலங்கை முஸ்லிம்களின் அரபுமயமாக்கலை
இத்தாக்குதலுக்கான காரணமாக அடையாளப்படுத்தியுள்ளனர். தாக்குதல்களுடன் முஸ்லிம்களில் சிறுபகுதியினர் தொடர்புபட்டிருப்பதன் காரணமாக தாக்குதல்களைத்தொடர்ந்து இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.ஆகவே தான் இத்தாக்குதலின் பின்னனி என்ன என்பதனையும் இத்தாக்குதலின் விளைவு யாது என்பதையும் கண்டறிவதை நோக்காகக் கொண்டு இவ்வாய்வு இடம் பெற்றுள்ளதுடன் ஆய்வுத் தகவல்கள் 2ஆம் நிலைத்தரவு களிலிருந்து பெறப்பட்டுள்ளதுடன் இவ்வாய்வின் கண்டு பிடிப்புகளாக ஈஸ்டர் தாக்குதலையும் அவற்றின் விளைவு களையும் இதனால் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் முகம்கொடுக்க வேண்டிய சவால்களையும் வெளிப்படுத்தி யுள்ளது.