Abstract:
இவ் ஆய்வானது கர்நாடக இசை கற்றவர்களுக்குத் தற்காலத்தில் வேலை வாய்ப்பைக் கொடுக்க பொதுவாகவே தொழில் வழங்கும் நிறுவனங்கள் பின்னடிப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப் படுகின்றது. விபரக்கொத்து மூலம் நேரடிக் கலந்துரையாடல் மற்றும் குழுக் கலந்துரையாடல் முறை ஆகியன இவ் ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றன. வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கள் இசைப் பட்டப் படிப்பு பாடநெறியிலும் இசையாளர்கள் பாடநெறிக்கு ஊடாக வளர்த்துக் கொள்ளும் திறன்களிலுமே தங்கியுள்ளது. தொழில் வழங்கும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களைக் கண்டறிந்து பாடநெறிக்குள் புகுத்துவதனூடாக தொழில் வழங்கும் நிறுவனங்களது எதிர்பார்ப்பை இசைப் பட்டப் படிப்பின் ஊடாகப் பட்டதாரிகளுக்குப் பெற்றுக் கொடுக்க முடியும்.