dc.description.abstract |
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கைத்தொழில்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்நிலையில் சிறு கைத்தொழில்கள் பிரதேச வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை
வழங்கிவருகின்றன. அந்தவகையில் தென்மராட்சிப் பிரதேச வளர்ச்சியில் சிறு
கைதொழில்கள் முக்கிய பங்காற்றுவதுடன் அவற்றுக்கு பல்வேறு வாய்ப்புக்களும்
சவால்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வானது தென்மராட்சிப்
பிரதேச சிறு கைத்தொழில்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும்
சவால்கள் போன்றவற்றை இனங்காண்பதாக அமைந்துள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில்
முக்கியமான சிறு கைத்தொழில்களில் 30 சிறு கைத்தொழில்களுக்கு வினாக்கொத்து
வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த
ஆய்விற்கு நேர்காணல், வினாக்கொத்து, நேரடி அவதானம், தொலைபேசி
கலந்துரையாடல் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட முதலாம் நிலைத் தரவுகள் மற்றும்
இரண்டாம் நிலைத் தரவுகள் SPSS, Excel ஆகியவற்றின் ஊடாக பகுப்பாய்வு
செய்யப்பட்டு முடிவானது SWOT பகுப்பாய்வு, விபரண புள்ளிவிபர பகுப்பாய்வு
ரீதியாகவும் வரைபடம், புள்ளிவிபர அட்டவணைகள் ஊடாகவும் பெறப்பட்டுள்ளது.
இவ்வாய்வில் பகுப்பாய்வின் மூலம் பெறப்பட்ட முடிவின்படி இயற்கை வளங்கள்,
ஊழியம், அமைவிடம், உள்ளூர் சந்தைவாய்ப்பு தொடர்பில் வாய்ப்புக்களும் மூலதனம்,
வெளியூர் சந்தைவாய்ப்பு, தொழில்நுட்பம், மூலப்பொருட்கள் கிடைப்பனவு,
உட்கட்டமைப்பு, ஊக்குவிப்புக்கள ; தொடர்பில் சவால்களும் காணப்படுவது
இனங்காணப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் சவால்களை வாய்ப்பாக மாற்றுவதற்கு
அரசு, கைத்தொழில் திணைக்களம் என்பன திட்டமிட்டு செயற்பாடுகளை
நடைமுறைப்படுத்துவதன் மூலம் அதாவது இலகு கடன் திட்டங்கள், பயிற்சிகள்,
கண்காட்சி செயற்பாடுகள், சந்தைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தல், புதிய தொழில்நுட்ப
வசதிகளை கிடைக்கச் செய்தல், மூலப் பொருட்களை இலகுவில் கிடைக்கச் செய்தல்,
உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றின் ஊடாக சிறு
கைத்தொழில்களை மேலும் முன்னேற்றமடையச் செய்ய முடியும். |
en_US |