dc.contributor.author |
ராதிகா, புவனேஸ்வரன் |
|
dc.contributor.author |
சுதாகர், கருணாகரன் |
|
dc.date.accessioned |
2021-11-23T12:16:27Z |
|
dc.date.available |
2021-11-23T12:16:27Z |
|
dc.date.issued |
2021-11 |
|
dc.identifier.citation |
Kalam, International Research Journal, Faculty of Arts and Culture,14(2), 2021. pp. 105-118. |
en_US |
dc.identifier.issn |
1391-6815 |
|
dc.identifier.issn |
2738-2214 |
|
dc.identifier.uri |
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5846 |
|
dc.description.abstract |
பிரதேசம் ஒன்றின் இடம்சார் அபிவிருத்தி வேலைகளைத் திட்டமிடுவதற்கு
நிலப்பயன்பாட்டு ஆய்வுகள் இன்றியமையாதனவாகின்றன. நிலப்பயன்பாட்டு
வகைகளின் இடம்சார் பரம்பல் அவற்றின் மாற்றங்கள் பற்றிய அறிவு நில
மூலவளங்களின் நிலைத்து நிற்கும் பயன்பாடுஇ முகாமை போன்றவற்றுக்கு
அவசியமாக இருக்கின்றது. நிலப்பயன்பாட்டு மாற்றம் என்பது ஆகக் குறைந்தது
இரண்டு வெவ்வேறு காலப்பகுதியில் புவிமேற்பரப்பில் காணப்படும் பல்வேறு
நிலப்பயன்பாடுகளின் வேறுபாடுகளை அடையாளம் செய்தலைக் குறிக்கின்றது.
இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தொண்டமனாறு
மற்றும் உப்பாறு கடனீரேரி சார் பகுதிகளில் உவர்நீர்த்தடுப்பணை
அமைக்கப்பட்டுள்ளதால் கடனீரேரிசார் பகுதிகளின் நிலப்பயன்பாடுகளில் மாற்றங்கள்
ஏற்பட்டு வருவதால் அவற்றினைப் படமாக்குதலும் மதிப்பிடலும் இவ் ஆய்வின்
நோக்கமாக உள்ளது. பங்குபற்றுதலுடனான களஆய்வுஇ இலங்கை நிலஅளவைத்
திணைக்கள எண்சார் நிலப்பயன்பாட்டுப் படங்கள் ((Digital Land Use Map))
போன்றவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி புவியியல்
தகவல் ஒழுங்கு ((Geographical Information system – GIS) தொழில்நுட்பத்தின்
உதவியுடன் நிலப்பயன்பாட்டு மாற்றங்கள் கண்டறியப்பட்டு அவை
மதிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக 1981இ 2019 ஆம் ஆண்டுகளின்
நிலப்பயன்பாட்டுப்படங்கள் பெறப்பட்டு விவசாய நிலம்இ வீட்டுத்தோட்டம்இ பற்றை
நிலம்இ மணல்இ சதுப்பு நிலம் ஆகிய நிலப்பயன்பாடுகள் அடையாளப்படுத்தப்பட்டுஇ
இரு ஆண்டுகளுக்குமான தரவுகள் ஒப்பீடு செய்யப்பட்டு நிலப்பயன்பாட்டு மாற்றப்
படங்கள் பெறப்பட்டுஇ பகுப்பாய்வுகள் (confusion matrix analysis) மூலமாக
நிலப்பயன்பாட்டு மாற்ற அட்டவணை (confusion matrix chart) பெறப்பட்டு
நிலப்பயன்பாட்டு மாற்றங்கள் அளவுரீதியாகவும் (quantitative) பண்புரீதியாகவும்
(quanlitative) மதிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலப்பயன்பாடுகளிலிருந்தும்
காலத்திற்குக் காலம் இழக்கப்பட்ட அளவுகள் மற்றும் பெறப்பட்ட அளவுகளும்
மாற்றமடையாத நிலப்பயன்பாடுகளும் கணிப்பிடப்பட்டதன் விளைவாக
நிலப்பயன்பாடுகளின் அளவு மற்றும் பண்பு ரீதியாக ஏற்பட்ட மாற்றங்களையும்
அறியக்கூடியதாக உள்ளது. 1981 இல் இருந்து 2019 இல் 1789 ஹெக்டேயர்
வீட்டுத்தோட்டம் விவசாய நிலமாக மாறியுள்ளது. அத்துடன் 234 ஹெக்டேயர் சதுப்பு
நிலம் விவசாய நிலமாக மாறியுள்ளது. இவ்வாறாக காலரீதியான மாற்றங்களை
அறியக்கூடியதாக உள்ளது. 2011 இன் பின்னர் உவர்நீர்த்தடுப்பணைகள் ஓரளவு சீராக
இயங்குவதனால் கடனீரேரிசார் பகுதிகளின் உவர்த்தன்மை
குறைவடைந்துள்ளமையினால் 1981 இல் 3327 ஹெக்டேயர் ஆக இருந்த விவசாய
நிலப்பயன்பாடு 2019 இல் 4614 ஹெக்டேயர் ஆக 10மூ இனால் அதிகரித்துள்ளது.
எனவே இவ் ஆய்வானது தொண்டமனாறு மற்றும் உப்பாறு கடனீரேரிசார் பகுதிகளின்
நிலப்பயன்பாடுகளையும் அதில் ஏற்பட்டுவரும் மாற ;றங்களையும் படமாக்கிக்
காட்டியுள்ளதோடு மாற்றங்களை அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் அறிந்து
கொள்ள முடிந்ததுடன் எதிர்காலத்திலே இப்பிரதேசங்களில் மேற்கொள்கின்ற
அபிவிருத்திச் செயற்பாடுகள், ஆய்வுகளுக்கு மூலமாக அமையும் என்பதில்
ஜயமில்லை. |
en_US |
dc.language.iso |
en_US |
en_US |
dc.publisher |
Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil. |
en_US |
dc.subject |
தொண்டமனாறு கடனீரேரி |
en_US |
dc.subject |
உப்பாறு கடனீரேரி |
en_US |
dc.subject |
நிலப்பயன்பாட்டு மாற்றங்கள் |
en_US |
dc.subject |
புவியியல் தகவல் ஒழுங்கு |
en_US |
dc.subject |
உவர்நீர்த் தடுப்பணை |
en_US |
dc.title |
நிலப்பயன்பாட்டு மாற்றங்களைப் படமாக்கலும் மதிப்பிடலும்: தொண்டமனாறு மற்றும் உப்பாறு கடனீரேரி |
en_US |
dc.type |
Article |
en_US |