dc.description.abstract |
இலங்கை முஸ்லிம் சமூகம் தனித்துவமான பழமொழி இலக்கியத்தை
கொண்டிருக்கின்றனர். ஏனைய முஸ்லிம் இலக்கிய வடிவங்களைப் போலவே
முஸ்லிம்களின் பழமொழிகளும் அறபு மொழி செல்வாக்குப் பெற்றுள்ளன,
இவ்விடயம் இன்றைய இலங்கைச் சூழலில் முக்கிமானதொரு பேசுபொருளாக
மாறியுள்ளது. இலங்கையின் அரசியல் மற்றும் சமூக வெளியில் அறபு மொழி
தொடர்பிலும், முஸ்லிம்களின் சமய, கல்வி, கலை கலாசார அம்சங்களில் அதன்
பின்புலம் தென்படுகின்றமையும் ஏனைய சமூகத்தாரிடையே பல்வேறு வாதப்
பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாய்வு, இலங்கை முஸ்லிம்களின் மொழி
வழக்கில் அறபு மொழி செல்வாக்குச் செலுத்த ஏதுவாகிய காரணிகளை கண்டறிந்து,
முஸ்லிம்களின் பழமொழிகளில் காணப்படும் அறபு மொழிச் சொற்களை
வெளிப்படுத்தி, அதன் கருத்துக்களை இஸ்லாமிய, அறபு இலக்கிய
மூலாதாரங்களுடன் ஒப்பிட்டு நோக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக
விவரண மற்றும் பகுப்பாய்வியல் முறைகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாய்வுக்காக
கவிஞர் எஸ். முத்துமீரானின் “இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள்”
எனும் நூலிலிருந்து, ஆய்வாளரினால் அட்டவணைப் படுத்தப்பட்ட முப்பது
பழமொழிகளில், எளிய எழுமாற்று மாதிரியெடுப்பு முறையைப் பயன்படுத்தி 05
பழமொழிகளை ஆய்வுக்காக எடுத்து, அறபு இலக்கிய மூலாதாரங்களில் குறித்த
சொற ;கள் பயன்படுத்தியுள்ள பாங்கினை ஆய்வாளர் ஒப்பிட்டு விளக்குகின்றார்.
இவற்றை, தமிழில் பாவனையில் உள்ள அறபுச் சொற்கள், தமிழுக்கு
மொழிபெயர்க்க முடியாத சொற்கள், தமிழுக்கு மொழிபெயர்க்கத்தக்க சொற்கள்,
மறைமுகக் கருத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் என வகைப்படுத்தலாம். அத்துடன்,
சில பழமொழிகளில் இரு அறபுச் சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. |
en_US |