Abstract:
தொழில் வழிகாட்டல் என்பது ஒரு மாணவனின் எதிர்காலத்தினை உயர்ச்சி அடையச் செய்வதில் பங்காற்றுகின்ற ஒரு முக்கியமான அம்சம் எனலாம். அந்த வகையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர்களின் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின்னர் தனக்கான தொழில் துறையை தேர்வு செய்ய இவ்வாறான தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள் பல்கலைக்கழக இளநிலைப் பட்டதாரிகள் மத்தியில் நடாத்தப்பட வேண்டியது முக்கிய தேவைப்பாடாக உள்ளது. இவ்வாய்வானது தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதா என்பதனை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப் பட்டுள்ளது. விபரிப்பு முறையில் அமைந்த இவ்வாய்வில் முதலாம். இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் இரண்டாம் பேரிடமிருந்து வினாக்கொத்து மூலம் அவதானம் மூலமும் முதலாம் நிலைத்தரவுகள் வருட தகவல்கள் மாணவர்கள் பெறப்பட்டன. பெறப்பட்டன. 150 மேலும் இரண்டாம் நிலைத்தரவுகள் ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள் மூலம் பெறப்பட்டன. பெறப்பட்ட தகவல்கள் MS Excel மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன. தொழில் வழிகாட்டல்" கருத்தரங்குகளில்] பங்குகொள்ளும் போது முன்னேற்றங்களை ஏற்படுவதையும், இக் கருத்தரங்குகளில் மாணவர்கள் Sell ஓரளவான Testing மூலம் தங்களை முழுமையாக அடையாளம் கண்டு கொள்வதையும் மாணவர்களது பதில்களில் இருந்து பெறுபேறுகளாகக் கண்டறியப்பட்டன. தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள் மாணவர்கள் மத்தியில் இடம்பெற்றாலும் அது பற்றிய பூரண தெளிவு கிடைக்காமை. இது போன்ற அதிகமான நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் நடத்தப்பாடமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இளங்காணப்பட்டதோடு இன்னும் அதிகமாக இவ்வாறான தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள் நாடு பூராகவும் நடாத்தப்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதும் ஆய்யின் முடிவாக கண்டறியப்பட்டது.