dc.description.abstract |
பொதுவாக, கிராமிய குடிநீர் விநியோகத் திட்டங்களில் பயனாளர்களை (கிராம மக்களை) விட வெளித்தரப்பினர்கள் அதிக தலையீடு கொண்டிருந்தமையை இல்லாமல் செய்யும் ஒரு முக்கிய உத்தியாக பங்கேற்பு அணுகுமுறை பரிந்துரைக்கப்பட்டது. சமுதாயப் பங்கேற்பின் மூலம் பயனாளர்கள், திட்டங்களின் ஒவ்வொரு படித்தரங்களிலும் ஈடுபட்டு அத்தகைய திட்டங்கள் வெற்றி பெறவும் நிலைத்து நிற்கவும் செயற்படுவர். இதனால், சமுதாயப் பங்கேற்பானது குறிப்பாக கிராமிய குடிநீர் நீர் விநியோக செயற்திட்டங்களில் மிக ஆழமான கண்ணோட்டத்தில் இன்று ஆராயப்படுகின்றது. இத்தகைய பின்னணியில், இக்கட்டுரையானது கிராமிய குடிநீர் விநியோகத் திட்டங்களில் எவ்வளவு தூரம் சமுதாயப் பங்கேற்பு முறைமை உள்வாங்கப்பட்டுள்ளது அல்லது பரிந் துரைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிவதை நோக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. முறைப்படுத்தப்பட்ட இலக்கிய மீளாய்வு (SLR) மூலமாக பெறப்பட்ட தரவுகள் பிரதான கலந்துரையாடலுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளன. ஆய்வுப் பெறுகைகள் கலந்துரையாடல்கள் என்பன விவரிப்பு முறையில் இக்கட்டுரையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இறுதியாக இவ்வாய்வு, சமுதாயப் பங்கேற்பானது கிராமிய குடிநீர் வினியோகத் திட்டங்களில் ஒரு சிறந்த பொறிமுறையாக இருக்கின்றமையை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் சமுதாயப் பங்கேற்பு மூலமே ஒரு திட்டம் அதன் இலக்குகளை அடையவும், திட்டங்கள் வெற்றி பெறவும் நிலைத்து நிற்கவும் காரணியாய் அமையும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்தியுள்ளது. |
en_US |