Abstract:
உலகளாவிய மட்டத்தில் ஏற்பட்ட கொவிட்-19 தாக்கத்தினால் இலங்கையின்
கல்வித் துறையிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இவ்வகையான
பாதிப்பக்களுக்கு அப்பால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை
தொடர்ச்சியாக மேற்கொண்ள்ளும் வகையில் பல்கலைக்கழகங்கள் நிகழ்நிலை
மூலமான கற்றலைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இவ்வகையில்
இத்தகைய கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளைப் பல்கலைக்கழகங்கள்
மேற்கொண்டு வந்தாலும், இவற்றில் பல்வேறு சவால்கள் காணப்படுவதாக
ஆய்வுகள் முன்வைக்கின்றன. இவ்வகையில் இவ்வாய்வானது நிகழ்நிலையில்
கற்றலை மேற்கொள்ளும் மாணவர்கள் அவர்களின் கற்றல் இடம்பெறும்
சூழல்களில் எதிர்கொள்ளும் சவால்களை முன்வைப்பதனை நோக்கமாகக்
கொண்டு, சமூகவியல் கண்ணோட்டத்தில் மேற்கொள்ளபப்படுகின்றது.
இவ்வாய்வை மேற்கொள்வதற்கு கலப்பாய்வு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தரநிலை ஆய்வுக்காக நிகழ்கலை மூலமான வினாக்கொத்து
முறையும், பண்பியல் முறையிலான ஆய்விற்காக கலந்துரையாடலும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்விற்கான தரவுகளைச் சேகரிக்கும் நுட்பமாக
தரரீதியான ஆய்வில் மூடிய வினாக் கொத்துமுறையும், பண்பியல் முறையில்,
ஆழமான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டது. பெறப்பட்ட தகவல்கள்
எளிய புள்ளிவிபர கணணிமுறைப் பகுப்பாய்விற்கும், ஆழமான கலந்துரையாடல்
மூலமான தரவுகள் பொருள்சார் எண்ணக்கருப் பகுப்பாய்விற்கும்
உட்படுத்தப்பட்டது. ஆய்வின் பிரதான முடிவாக அதிகமான மாணவர்கள் தமது
கற்றலின் போது, பொருளாதாரம், வீட்டுச் சூழல்சார் பௌதீக வசதிகள்
குறைபாடு மற்றும் உளரீதியான சவால்கள் ஆகியனவற்றை
எதிர்கொண்டுள்ளனர். இத்தகைய தடைகளை நீக்குவதற்கான கொள்கை
வகுப்புக்களை எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களும், பலகலைக் கழக
மானியங்கள் ஆணைக்குழுவும் மேற்கொள்ளும் போதே, பெரும்பாலான
மாணவர்களின் நிகழ்கலைக் கற்றலை தடையில்லாமல் மேற்கொள்ள
வசதிகளை ஏற்படுத்தலாம்.