dc.description.abstract |
கோவிட் - 19 காலப்பகுதியில் பாடசாலை மாணவர்கள் கட்டாயமாக
கைத்தொலைபேசியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியள்ளதால்
அவர்களின் கைத்தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளது. ஆகவே அதிகரித்த
கைத்தொலைபேசி பாவனையானது மாணவர்கள் மத்தியில் எவ்வாறான
முறையில் தாக்கத்தை செலுத்துகின்றது என்பதை இனங்கண்டு அவற்றிற்கான
திர்வுகளை முன்வைப்பதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இவ்வாய்வானது
முதலாம், இரண்டாம் நிலை தரவு மூலாதாரங்களினைப் பயன்படுத்தி அளவசார்
மற்றும் பண்புசார் ஆய்வுமுறைகளை அடிப்படையாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் நிலைத்தரவு வினாக்கொத்து மூலமும்,
இரண்டாம் நிலைத்தரவு முன்னைய ஆய்வுகள், நூல்கள், இணையத்தளம்
மூலமும் பெறப்பட்டுள்ளன. பகுப்பாய் விற்காக Google form, Excel என்பன
பயன்படுத்தப்பட்டன. இவ்வாய்வின் மூலம் இக் கைத்தொலைபேசிகளைப்
பயன்படுத்துவதால் ஏற்பட்ட தாக்கங்களாக உடல் உள சோர்வு,
கைத்தொலைபேசி விளையாட்டுகளுக்கு அடிமையாதல், பண, நேர விண்விரயம்
போன்றன அடையாளம் காணப்பட்டது. இவ்வாய்வின் முடிவில்
கைத்தொலைபேசி பாவனையால் இப்பிரதேச மாணவர்களிடையே
கண்டறியப்பட்ட தாக்கங்களை முழுதளவிலே இல்லாமல் செய்ய
முடியாவிட்டாலும் அவற்றைக் குறைப்பதற்காக பின்வரும் பரிந்துரைகள்
முன்வைக்கப்பட்டன. கைத்தொலைபேசி பாவனையால் ஏற்படும் தாக்கங்களைப்
பற்றி எடுத்துரைத்தல், விழிப்புணர்வூட்டல், பெற்றோர் தம் பிள்ளைகள் என்ன
செய்கிறார்கள் என்பதை கவனித்தல் போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டன. |
en_US |