dc.description.abstract |
உலகளாவிய ரீதியில் மீன்பிடித்தொழில் மக்களின் பிரதான ஜீவனோபாயத்
தொழிலாகக் காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு
அடுத்த படியாக இரண்டாவது நிலையில் மீன்பிடித் தொழில் உள்ளது.
கல்முனை மீன்பிடி மாவட்ட மீன்பிடி பிரதேசங்களுள் சாய்ந்தமருது,
மாளிகைக்காடு கரையோர மீன்பிடி பிரதேசங்களும் இணைந்து
காணப்படுகின்றது. இப் பிரதேச மக்களின் வாழ்வாதார தொழில்களாக
விவசாயம், மீன்பிடி, வர்த்தகம் மற்றும் சேவை தொழில் உள்ளிட்ட ஏனைய
தொழில் நடவடிக்கைகள் காணப்படுகின்றது. ஆய்வுப் பிரதேசத்தில் மீனவர்கள்
மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் போது பல்வேறு சவால்களை எதிர்
நோக்குகின்றனர். இவ்வாறான சவால்களை இணங்கண்டு அவற்றுக்கான
தீர்வுகளை முன் வைப்பதே இவ் ஆய்வினுடைய பிரதான நோக்கம் ஆகும்.
அந்ந வகையில் இவ் ஆய்வுக்கான தரவுகளை பெற்றுக் கொள்வதற்கான
முதலாம் நிலைத்தரவுகளாக வினாக் கொத்து, நேர்காணல், நேரடி அவதானம்
போன்ற நுட்ப முறைகளின் மூலமும் இரண்டாம் நிலைத்தரவுகளானவை
கல்முனை கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அறிக்கை,
சாய்ந்தமருது பிரதேச செயலக அறிக்கை, மாளிகைக் காடு பிரதேச செயலக
அறிக்கை, முன்னைய வெளிவந்த ஆய்வுகள், இணையத்தளம்
போன்றவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
ஆய்வுப்பிரதேசத்தில் துறைமுக வசதி இன்மை, உயிர் மற்றும் உடைமை
பாதுகாப்புமின்மை, தொடர்பாடல் வசதிகள் இன்மை, மூலதனப் பற்றாக்குறை,
கள்வர்களின் அச்சுருத்தல், இழப்பீடுகள் ஏற்படும் போது அரசின் ஆதரவு
கிடைக்கப்பெறாமை, உபகரணங்கள் தரமின்மை, மீன்பிடி உற்பத்திப்
பற்றாக்குறை, கரையோர தின்னல் செயன்முறை, எரிபொருள் விலை ஏற்றம்,
முதலாளித்துவ ஆதிக்க போக்கு போன்ற சவால்கள் அடையாளப்படுத்தப்பட்டு
இவ் ஆய்வின் இறுதியில் இச் சவால்களுக்கு பொருத்தமான பரிந்துரைகளும்
முன் வைக்கப்பட்டுள்ளன. |
en_US |