Abstract:
அழகியல் அறுவை சிகிச்சை பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தை அல்குர்ஆன் சுன்னாவின்
நிழலில் ஆராய்வதனை நோக்காகக் கொண்டு மேற்க்கொள்ளப்பட்ட இவ்வாய்வானது பண்பு
(Quantitative) ரீதியில் அமைந்த கோட்பாட்டு அணுகுமுறையில் (Theorotical approach)
அடிபப்டையிலான ஆய்வாகும். இரண்டாம்தர மூலாதாரங்களை (Secondary datas)க்
கொண்டமைந்த இவ்வாய்வுக்காக இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களின் ஆதாரங்கள் மற்றும்
இஸ்லாமிய வரலாற்று ரீதியிலான ஆதாரங்கள் என்பவற்றோடு அழகியல் அறுவை சிகிச்சை
தொடர்பான சமகால முஸ்லிம் அறிஞர்களின் ஆக்கங்கள், ஆய்வுகள் போன்றவற்றில் இருந்தும்
பெறப்பட்ட தகவல்கள் தொகுத்தறிதல் முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள்
முன்வைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையானது ஒப்பனை அல்லது
அழகியல் அறுவை சிகிச்சை (Cosmetic/Aesthetic) மற்றும் புணரமைப்பு (Reconstructive)
செய்வதற்கு மேற்கொள்ளப்படக் கூடிய அறுவை சிகிச்சை போன்ற இரண்டு வகையில்
மேற்கொள்ளப்படுகின்றது. மறு சீரமைப்பு செய்வதற்கு மேற்கொள்ளப்படக் கூடிய அறுவை
சிகிச்சை (Reconstructive Surgery) உடலின் ஒரு பகுதியை புணரமைத்தல் அல்லது அதன்
செயல்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, ஒப்பனை அறுவை
சிகிச்சையானது (Cosmetic Surgery) உடல் ரீதியாக எவ்வித பிரச்சினைகளும் இல்லாத போதும்
அழகை மட்டும் நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. மனிதனின் நலனுக்காக
வேண்டி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்வதை இஸ்லாம் வரவேற்கின்றதோடு, இறைவனுடைய படைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், நியாயமான காரணங்கள்
எதுவுமின்றி மேற்கொள்ளப்படக் கூடிய ஒப்பனை அறுவை சிகிச்சையை இஸ்லாம்
தடைசெய்கின்றது என்பது இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாய்வானது
அறுவைச்சிகிச்சை முறை தொடர்பான இஸ்லாமிய நோக்கினை மக்கள் தெளிவாக
புரிந்துகொள்வதற்கு வழிகோலும் என எதிர்பார்க்கப்படுகின்றது.