Abstract:
நீதிக் கருத்துக்கமள மானிட சமூகத்திற்கு வலியுறுத்துவதில் இலக்கியங்களும், சமயங்களும்
முதன்மை பெறுகின்றன. ஔவையார், 'ஆத்திசூடி' எனும் இலக்கியப் படைப்பின் மூலமாக
மானிட வாழ்வுக்குரிய 108 நீதிக் கூற்றுக்களைப் பேசுகிறார். குறிப்பாக அறவுடைமை, கோபம் தவிர்த்தல், கொடையுடைமை, முயற்சியுடைமை, பொறாமை தவிர்ப்பு, பேராசை தவிர்த்தல், நன்றியுடைமை, தீஞ்சொல் தவிர்த்தல் முதலிய வாழ்வியல் அறங்களைப் போதிக்கிறாா். இதே சிந்தனைகள், இஸ்லாமிய இறை வேதமாகிய குர்ஆனிலும், இறைத்தூதாின் வாழ்வியல் வடிவமாகிய ஹதீஸிலும் நிறையவே பொதிதிந்துள்ளன. எனவே மானுட வாழ்விற்குரிய நீதிசார் போதனைக்கருத்துக்கள், ஔவையாரின் ஆத்திசூடியிலும், இஸ்லாம் மார்க்கத்தின் புனித நூல்களாகிய குர்ஆன் மற்றும் ஹதீஸ் முதலிய இலக்கியங்களில் எவ்விதம் பயிலப்பட்டு வந்துள்ளன என்பதனை ஒப்பியல் நோக்கில் வலியுறுத்தி, அவற்றின் எதிர்காலச் சந்ததிக்கு ஆவணப்படுத்தும் நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது பண்புசார் முறை, விபரணப் பகுப்பாய்வு முறை ஆகிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி ஒப்பியல் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கு ஔவையாரின் ஆத்திசூடியும், இஸ்லாமியப் புனி நூல்களான அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் முதலியவையும் முதன்மைத் தரவுகைாகப் பயன்படுத் ப்பட்டுள்ளதுடன், ஆய்வுத் தலைப்புடன் தொடா்புடைய நீதிசார் இஸ்லாமியக் கட்டுரை நூல்கள், இதழ்கள், மின்னூடகக் கருத்துக்கள் முதலிய துணைநிலைத் தரவுகைாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே வேறுபட்ட மதப்பண்பாட்டு இலக்கியங்களை
மையப்படுத்தி, ஒப்பியல் நோக்கில் இது போன்ற மேலும் பல ஆய்வுகள் ஆராயப்பட
வேண்டுமென்பதையும் இவ்வாய்வானது பரிந்துரை செய்கின்றது.