Abstract:
இலங்கை முஸலிம் தனியார் சட்டத்தின் கீழான முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின் பிரிவு 47(1) பிரிவானது பராமரிப்பு நடைமுறைகள் தொடர்பாக தெளிவாகப் பேசுகிறது. மண விலக்கின் போது மனைவி பிள்ளைகள் சார்பில் கோரப்படும் தொகையை கணவன் தனது பொருளாதார வசதிகளுக்கேற்ப பராமரிப்புத் தொகையாக வழங்க வேண்டும். இப்பராமரிப்பை பெற்றக்கொடுக்கும் அதிகாரம் காழிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக காழி நீதிமன்றங்களில் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகம் என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது. இதனால் முஸ்லிம் பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை பொறுத்தமட்டில் ஒரு போராட்ட குழு ஒன்றையே உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களுடைய ஊடகக் குரல்கள் முஸ்லிம் சிவில் சமூக அமைப்பை விழிப்படையச் செய்துள்ளன. அதனால் இன்று காழி நீதிமன்றங்களை அகற்றுமாறும், திருத்தம் செய்யுமாறும் கோஷங்கள் எழுப்புமளவு நிலை மாறியுள்ளது. இவற்றின் சரியான நிலை குறித்து அறிய பிரதேச ரீதியான காழி நீதிமன்றங்களின் பராமரிப்பு நடைமுறைகள் குறித்த ஆய்வுகள் அவசியப்படுகின்றன. அப்போதுதான் குறித்த பகுதிகளில் அதன் நிலை தொடர்பான தெளிவுகளைப் பெற்றுக்கொண்டு எங்கு மாற்றங்கள் தேவை? முறையான செயற்படுகின்றதா? இல்லையா? என்ற முன்மொழிவுகளுக்கு வரமுடியும். இதனடிப்படையில்தான் கல்முனைப் பிரதேசத்தில் இயங்கி வரும் காழி நீதிமன்றத்தின் பராமரிப்பு நடைமுறைகளை எந்தளவு தூரம் செயற்படுகின்றது என்பதை பரிசீலக்கும் வகையிலே இவ்வாய்வு அமைந்துள்ளது. புண்பு ரீதியானதும் அளவு ரீதியானதமான ஆய்வு முறையியல் அடிப்படையில் கல்முனை காழி நீதிபதியுடனான நேர்காணல், பராமரிப்பு பெறும் குடும்பங்களுடனான தரவு சேகரித்தல் மற்றும் பிரதேச செயலக பதிவாளர் பிரிவின் விவாகரத்து அறிக்கைகள் தொடர்பான தகவல்களை கொண்டு 2019-2021 வரையிலான பராமரிப்ப வழக்ககளின் பகுப்பாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு முடிவகளைப் பெறும் நோக்கில் மெற்கொள்ளப்படுகின்றன.