Abstract:
சொல்லுக்குப் பொருள் கூறும் முயற்சியோடு அகராதி தோற்றம் பெறுகின்றது. இது தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் சடுதியாக தோற்றம் பெற்ற ஒன்றாக அமையவில்லை. அதாவது பழம் பெறும் இலக்கண நூலாகக் கருதப்படும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள இடையியல், உரியியல், மரபியல் எனும் மூன்று இயல்களிலும் சொற்களுக்கான பொருள்கள் தரப்பட்டுள்ளன. இலக்கணக் கல்வியின் ஒரு பகுதியாக இருந்த சொற்பொருள் கூறும் மரபு தனி ஒரு பிரிவாக வளர்ந்து நிண்டுகளின் தோற்றத்திற்கு காரணமாகியது. ஐரோப்பியரின் வருகையோடுதான் தமிழில் நவீன முறையிலான அகராதிகள் தோற்ற ஆரம்பித்தன. நிண்டுகள் பா வடிவில் அமைந்திருந்தமையால் தமிழைக் கற்ற நேரிட்ட ஐரோப்பியப் பாதிரிமார்களால் நிண்டுகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்ட காரணத்தினால் அவர்கள் நவீன முறையில் அமைந்த அகராதிகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் அவர்கள் நவீன அகராதிகள் பலவற்றை உருவாக்கினர். அவற்றைப் பின்பற்றியே தமிழ் அகராதிகள் தோன்றின. ஈழத்தில் எழுந்த தமிழ் அகராதிகளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.