Abstract:
மாறிவருகின்ற சமூக சூழலில் இளங்குற்ற நடத்தை முக்கிய சமூக பிரச்சினையாக அமைந்துள்ளது. 18 வயதிற்குற்பட்ட சிறுவர்களால் சமூகத்தினுடைய விழுமியங்களுக்கும்> சமூகத்தினுடைய கூறுகளின் செயற்பாட்டிற்கும் பாதிப்புகள் ஏற்படுத்தப்படும் போது இச்சிறுவர்களின் நடத்தை இளங்குற்ற நடத்தையாக அடையாளப்படுத்தப்படுகின்றது. இளங்குற்றவாளியாக சிறுவர்கள் நிலைமாற்றமடைவதனை தவிரப்;பதற்கான நடவடிக்கைகள் குடும்ப கட்டமைப்பு தொடக்கம் அரசாங்கம் வரையிலான நிறுவன ரீதியான செயற்பாடுகளும் அவசியமாகின்றது. இலங்கையில் காணப்படும் ஒரேயோரு தமிழ் மொழி மூல சான்று பெற்ற பாடசாலையான அச்சுவேலி சான்று பெற்ற பாடசாலை சிறுவர்களின் நன்நடத்தை பாடசாலையாகவும் மீளச்மூகமயமாக்கலுக்கான தளத்திளை உருவாக்குவதாகவும் காணப்படுகின்றது. அந்தவகையில் அச்சுவேலி சான்று பெற்ற பாடசாலையில் மீளச்மூகமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களின் குற்ற நடத்தைக்கான சமூக குடித்தொகை காரணிகளும்> விளைவுகளும் எனும் இவ்வாய்வானது கணியம் மற்றும் பண்புசார் ஆய்வு நுட்ப முறைகள் சேர்ந்த கலப்பு முறை ஆய்வாக அமைந்துள்ளது. கணியம்சார் தரவுகள் கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்து மூலமாகவும் பண்புசார் தரவுகள் விடய ஆய்வு> ஆழமான நேர்காணல்> நேரடி அவதானம் ஆகியவற்றுடன் நூல்கள்> சஞ்சிகைகள்> அரசாங்க அறிக்கைகள்> இணைய கோப்புகள் மூலமாக இரண்டாம் நிலை தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட கணியம் சார் தரவுகள் சமூக விஞ்ஞான ஆய்வுகளுக்கான தரவு மென்பொதி (SPSS) ஊடாககவும் பண்புசார் தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்வு மூலமாகவும் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இளங்குற்ற நடத்தைக்கான முக்கிய காரணிகளாக குடும்பங்களில் சிறுவர்களுக்கு கிடைக்கும் அன்பு மற்றும் கரிசனை> சிறுவர்களினுடைய நண்பர்களினால் தவறாக வழிநடத்தப்படல் மற்றும் குற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அழுத்தம்> ஊடகங்களினால் கவரப்படல் மற்றும் சமூக ரீதியாக எல்லைப்படுத்தல் போன்றவை இளங்குற்ற நடத்தைக்கான பிரதான காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் இளங்குற்ற நடத்தையினால் ஏற்படும் விளைவுகள் எனும் போது போதைப்பொருள் பாவனை> குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து எல்லைப்படுத்தப்படல்> குற்றநடத்தைகளில் இருந்து வெளிவருவதற்கான கடினத்தன்மை மற்றும் முயற்சியின்மை போன்றவற்றுடன் மீள்சமூகமயமாக்கலின் மூலமாக தாங்களும் சமுதாயத்தில் முன்மாதிரியான பிரஜையாக வர வேணடு;ம் போன்ற உள மாற்றங்களும் பிரதான விளைவுகளாக இனங்காணப்பட்டுள்ளன. சிறுவர்கள் சமூகத்தின் நாளைய பிரஜைகள்> சிறுவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் பெறுமதிமிக்கவை. இளங்குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படும் சிறுவர்களை தொடர்ந்தும் குற்றவாளிகள் என முத்திரைக்குத்தாமல் அவர்களையும் சமூகத்தினுடைய எதிர்க்காலத்திற்கான சிறந்த உறுப்பினராக செயற்படுவதற்கான வாய்ப்பினையும் சூழலையும் உருவாக்க அரசாங்கம் தொடக்கம் தனிநபர் வரையிலும் சமூகத்தின் அனைத்து கூறுகளினுடைய பங்களிப்பும் அவசியமானதாக அமைந்துள்ளது. இவ்வாறான விடயங்களை முன்னிலைப்படுத்திய வகையில் ஆய்வானது இளங்குற்ற நடத்தைகளில் செல்வாக்குச் செலுத்தும் சமூக குடித்தொகை> தனிநபர் சார்ந்த காரணிகளும் விளைவுகளை இனங்காண்பதுடன் எதிர்கால ஆய்வுகளுக்கான முன்னோடியாகவும் அமைந்துள்ளது.