dc.description.abstract |
உலகில் காணப்படும் வளங்களை இயற்கை வளம், மனித வளம் என இரு பகுதிகளாக நோக்கலாம். மனித வளமானது உலகளாவிய ரீதியில் வளர்ச்சிப் போக்குடையதாக உள்ளது. இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகும். இந்நாட்டின் இயந்திர வளங்களை விட பிரதான மூல வளமாக சனத்தொகை காணப்படுகின்றது. அதிகரித்து வரும் இலங்கையின் சனத்தொகை பல்வேறு சவால்களை ஏற்படுத்துகின்றது. அவற்றை கண்டறிய வேண்டிய தேவை இன்று காணப்படுகின்றது. அந்த பின்னணியில் ஒன்றாக இவ்வாய்வு அமைகின்றது. சனத்தொகை வளர்ச்சி காரணமாக ஆய்வுப் பிரதேசத்தில் பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சூழல் சார்ந்த சவால்கள் தோற்றம் பெறுகின்றன. இவ்வகையில் ஆய்வுப் பிரதேசமான சாய்ந்தமருது பிரதேசத்தின் சனத்தொகை வளர்ச்;சியால் ஏற்படக் கூடிய சமூகம் சார்ந்த சவால்களை அடையாளப்படுத்துவது இவ் ஆய்வின் பிரதான நோக்கமாகும். இங்கு ஏற்படக் கூடிய சவால்களை இழிவளவாக்குவதற்கான ஆலோசனைகளை முன்மொழிதல் ஆய்வின் துணை நோக்கமாகவும் காணப்படுகின்றது. எனவே இவ்வாய்வுக்கான நோக்கத்தை பூரணப்படுத்துவதற்காக முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இங்கு முதலாம் நிலைத் தரவுகள் வினாக்கொத்து, நேர்காணல், நேரடி அவதானம் போன்ற நுட்ப முறைகள் மூலமும், இரண்டாம் நிலைத் தரவு சேகரிப்பு முறையாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஆவணப்படுத்தப்பட்ட புள்ளிவிபரவியல் அறிக்கைகள் (2011 – 2021), பிரதேச செயலகத்தின் ஆண்டு அறிக்கைகள் (2011 – 2021), கிராம சேவகர் பிரிவு ஆண்டறிக்கைகள், நூல்கள், ஏனைய ஆய்வு சஞ்சிகைகள், இணையத்தளம் போன்றவைகளின் மூலமும் பெற்றுக் கொள்ளப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் குடியிருப்பு சார்ந்த பிரச்சினைகள், போக்குவரத்துசார் பிரச்சினைகள், சூழல் அடர்த்தியடையும் நிலை, கழிவகற்றல் பிரச்சினை, உள்ளுர் நிர்வாக முறைகளில் உள்ள பிரச்சினைகள், தொழில்சார் பிரச்சினைகள் என்றவாறு சனத்தொகை வளர்ச்சியினால் ஏற்படக்கூடிய விளைவுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகளும் ஆய்வின் இறுதியில் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |