Abstract:
இந்து சமுத்திர வர்த்தகமானது பல ஆயிரக்கணக்கான வருட வர்த்தக வரலாற்றைக்
கொண்டதாகும். அவ்வர்த்தக வரலாற்றைக் கட்டியெழுப்புவதானால் இலக்கிய மூலாதா
ரங்களில் மட்டும் தங்கியிருப்பது சாத்தியமற்றதாகும். ஆகவே தொல்பொருள்
ஆதாரங்களது வகிபங்கு இதுதொடர்பில் அளப்பரியது. ஆகவே இவ்வாய்வானது இந்து
சமுத்திர வர்த்தக வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் நாணயங்கள் மற்றும் கல்வெட்டுக்
களால் ஆற்றப்படும் பங்களிப்பை எடுத்துக்காட்டுவதை நோக்காகக் கொண்ட
மைந்துள்ளது. இதற்காக இவ்வாய்வானது இரண்டாந்தர மூலாதாரங்களைப் பிரதானமாகக்
கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுக்களும் நாணயங்களும்
வர்த்தக வரலாற்றை வேறுபட்ட கோணங்களில் இருந்து அணுகி விரிவான தகவல்கள்
மூலம் வரலாற்றைக் கட்டியெழுப்ப வாய்ப்பளிக்கின்றமையும் இந்து சமுத்திர வர்த்தக
வரலாற்றில் இம்மூலாதாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமைக்கான
காரணங்களையும் இவ்வாய்வூடாக அறியமுடிகின்றது.