dc.description.abstract |
இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்பார்கள். அந்த இலக்கியங்களின்
தலையானது கவிதை என்று கூறலாம். சங்ககாலம் தொட்டு இக்காலம்வரை கவிதை
பல்வேறுபட்ட பாடுபொருட்களில் பாடப்பட்டே வந்திருக்கின்றன. சொற்சுவையும் பொருட்
சுவையும் மிகுந்த கவிதைகளை புலவர்கள் ஒவ்வொரு காலப்பகுதியிலும்
பாடி வந்திருக்கிறார்கள். சங்க காலத்தில் காதலையும் வீரத்தையும் பாடிவந்த புலவர்கள்
அதன் பின்னர் அறத்தையும் வீரத்தையும் பாடத்தொடங்கினார்கள். காலமாற்றத்திற்கு ஏற்ப
கவிதைகளின் உள்ளடக்கமும் வடிவமும் மாறத்தொடங்கின. நவீன கவிதையின்
தோற்றத்தினால் பாரதியார் ‘சொல் புதிது சுவை புதிது’ என சோதிமிக நவகவிதையினை
பாடத்தொடங்கினார். தனது கவிதையின் ஊடாக மக்களைப் பாடத்தொடங்கிவிட்டார்.
இவ்வாறு பாரதியார் தோற்றுவித்த நவீன கவிதை இன்று பல்வேறுபட்ட திசைகளில்
வளர்ந்திருக்கின்றது. அந்த கவிதைகளுக்குள்ளே மக்கள் வாழ்வியல் பொதிந்திருக்கின்றது.
அந்த வாழ்வியலுக்குள்ளே மக்களின் பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.
தமிழ்நாட்டு கவிதைகளில் மட்டுமல்ல இலங்கைக் கவிதைகளிலும் கவிஞர்கள் எழுதிய
கவிதைகள் பல்வேறுபட்ட பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்துகின்றன. ஈழத்து
இலக்கியத்தின் தோற்றுவாய் எனக்கூறத்தக்க ஈழத்துப் பூதந்தேவனார் தொட்டு சமகாலத்து
கவிஞர்கள் வரை தமது கவிதைகளுக்குள்ளே தான்சார்ந்த சமூகத்தின் பண்பாட்டு
அம்சங்களை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். அந்த வகையில் ஒலுவில்
பிரதேசத்து கவிஞர்களும் தங்களுடைய கவிதைகளில் தான் சார்ந்த சமூகத்தின் பண்பாட்டுக்
கோலங்களை அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். அவ்வாறான பண்பாட்டம்சங்களை
ஆய்வு செய்யுமுகமாகவே இந்த ஆய்வு நோக்கப்படுகிறது. ஒலுவிலில் வாழ்ந்த வாழ்ந்து
கொண்டிருக்கின்ற பல்வேறுபட்ட கவிஞர ;களின் கவிதைகள் இங்கு நோக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஒலுவிலில் வாழ்ந்து மறைந்த யூசுப் பாவலர், புதுலெப்பை புலவர்,
தோம்பர், பரிசாரி மொய்தின் பிச்சை புலவர், நேந்தம்மா, கிளிமா, ஈஸா லெப்பை
முதலான புலவர்கள்தொட்டு மறைந்த ஒலுவில் அமுதன், சொல்லன்பன் ; நசிறுத்தீன், இன்றும்
எழுதிக் கொண்டிருக்கின்ற கவிஞர்களான அன்புடீன் எஸ். ஜலால்தீன், ஜே. வஹாப்தீன்,
அசீஸ் எம். பாயிஸ், எஸ்.எம். ஐயூப், அல்பத்தா, க. சியா என கவிஞர்கள் பட்டியல்
நீண்டு கொண்டே செல்கின்றது. இவர்களது கவிதைகளில் வெளிப்படும் ஒலுவில்
பிரதேசத்து சமூக பண்பாட்டு அம்சங்களை ஆய்வு செய்வதாகவே இவ்வாய்வு
அமைந்துள்ளது. |
en_US |