Abstract:
நீண்ட வரலாற்றினை கொண்ட அரசியல் துறையின் வளர்ச்சியில் பல்வேறு சிந்தனையாளர் கள் பங்களிப்பு செய்து அரசியலில் பல புரட்சிகரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார் கள். அவர்களுள் மேலைத்தேய சிந்தனையாளரான மாக்கியவல்லி குறிப்பிடத்தக்கவராவார். இவர் நவீன அரசியிலி;ன் தந்தை என அழைக்கப்படுகின்றார். இளமைக் காலத்தில் நடைமுறை அரசியலில் ஈடுபாடுடையவராகக் காணப்பட்ட இவர காலப்போக்கில் அரசியலில் திருச்சபையின் ஆதிக்கத்தை கண்டு அதிலிருந்து இருந்து விலகி புதியதொரு அரசியல் கருத்தியலை உருவாக்க முயன்றார். சமயமும் ஒழுக்கமும் அரசியலில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டு மன்னன் சட்டங ;களை உருவாக்கி போர் செய்து வெற்றி பெற்று நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தி மக்களை ஆளுகைக்குள் உட்படுத்தி ஆட்சிபுரியும் ஆட்சிமுறையே நீண்ட காலம் நிலைபேறுடையது. மனிதர்களின் பலவீனங்களை
சுட்டிக்காட்டி அவர்களை அன்பால் அஹிம்சையால் வழிநடத்தி ஆட்சி செய்வதை விட
அதிகாரத்தால் அடக்கி ஆள்வதன் மூலமே ஆட்சியாளன் தமது இலக்குகளை அடைய முடியும் என்ற மாக்கியவல்லியின் சிந்தனைகள் அரசியல் விஞ்ஞானம் சார்பாக நியாயப்படுத்தக் கூடியதாக இருந்தாலும் அரசியல் மெய்யியல் நோக்கில் பல விமர்சனங ;களை தாஙகியுள்ள தை ஒப்பீட்டு, விமர்சனம், வரலாறு, பகுப்பாய்வு போன்ற முறைகளினூடாக வெளிப்படுத்த இந்த ஆய்வு முனைகிறது