dc.contributor.author |
ஹூஸ்னா, எம்.எச்.எப். |
|
dc.contributor.author |
பாஸில், எம்.எம். |
|
dc.date.accessioned |
2023-03-29T06:56:00Z |
|
dc.date.available |
2023-03-29T06:56:00Z |
|
dc.date.issued |
2022-12 |
|
dc.identifier.citation |
Kalam, International Research Journal, Faculty of Arts and Culture, 15 (No.2), 2022. pp.61-74 |
en_US |
dc.identifier.issn |
Print:1391-6815 Online:2738-2214 |
|
dc.identifier.uri |
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6598 |
|
dc.description.abstract |
மனித உரிமைகள் என்ற எண்ணக்கருவானது 20ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில்
முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. ஆனால் ஆரம்ப காலங்களில் இருந்தே மனித
உரிமைகள் என்பது முக்கிய பேசுபொருளாக இடம்பெற்று வந்துள்ளது. மனித உரிமைகள் என்பது மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கிடைக்கப் பெற வேண்டியதாகும். எனினும் இன்று மனித உரிமை மீறல்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றமை அவதானிக்கத்தக்கது. இம்மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது இலங்கையில் மனித உரிமைகளைப் பேணிப்பாதுகாப்பதற்காக செயற்பட்டு வரும் முக்கிய அமைப்பாகும். இந்தடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பான மக்கள் விழிப்புணர்வு நிலை பற்றியும் ஆணைக்குழு தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதில் உள்ள சவால்கள் போன்றவற்றை கண்டறிவதை நோக்காகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயம் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. பண்பு மற்றும் அளவு ரீதியான ஆய்வு முறையியல் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்காக முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் விபரண முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழு பற்றிய மக்களின் விழிப்புணர்வு பல்வேறு கோணங்களில் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலமாக மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பாக மக்கள் மத்தியில் முழுமையான விழிப்புணர்வு காணப்படாமை கண்டறியப் பட்டதுள்ளதுடன் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆணைக்குழு எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களாக நிதிப் பற்றாக்குறை, பௌதீக மற்றும் ஆளணி பற்றாக்குறை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil |
en_US |
dc.subject |
உரிமை மீறல்கள், |
en_US |
dc.subject |
மனித உரிமைகள், |
en_US |
dc.subject |
மனித உரிமைகள் ஆணைக்குழு |
en_US |
dc.title |
மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த மக்கள் விழிப்புணர்வு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய காரியாலயத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
en_US |
dc.type |
Article |
en_US |