Abstract:
குழந்தை தத்தெடுத்தல் தொடர்பான சட்டக் கோவையுடன் நீண்ட காலமாக
நடைமுறையிலுள்ள ஒரு வழக்கமாகும். சில முஸ்லிம் நாடுகள் உட்பட பல நாடுகளில் சட்ட
ஏற்பாடுகளுடன் இந்த செயற்பாடு இன்று அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தின்
ஆரம்பகாலம் வரை வழக்கில் இருந்த குழந்தை தத்தெடுத்தல் முறையை அது தடை செய்து
மாற்;று ஒழுங்குகளை முன்வைத்துள்ளது. குழந்தைதத்தெடுப்பு தொடர்பான இஸ்லாமிய
மாற்றீடுகளை கோட்பாட்டு ரீதியாக விளக்க முனையும் இவ்வாய்வு, தொடர்பான
இலக்கியங்களை மீளாய்வுக்கு உட்படுத்தி, அவற்றின் கருத்தாக்கங்களை பகுப்பாய்கிறது.
இஸ்லாம் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதற்கு பகரமாக முன்வைக்கும் மாற்றீடுகளை இலக்கியங்கள் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளன. அர்-ரழா (பாலூட்டுதல் மூலம் குழந்தையாக மாறுதல்), அல்-கபாலா (பொறுப்பேற்றல்), அல்-முஸாஹரா திருமணத்தின் மூலம் உறவாகமாற்றிக் கொள்;ளல்), அல்-முஆகாத் (மார்க்கத்தில் சகோதரனாக மாற்றிக் கொள்ளல்), அல்-வஸீய்யா (உயில் எழுதுதல், மரணசாசனம்), அல்-ஹிபா (அன்பளிப்பாக வழங்குதல்). குழந்தை தத்தெடுத்து வளர்க்க ஆர்வம் கொண்ட முஸ்லிம்களுக்கு அதுதொடர்பான அறிவுறுத்தலாகவும் வழிகாட்டியாகவும் அமையவல்லது இவ்வாக்கம்.