Abstract:
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் இன உறவைப் பிரதிபலிக்கும் சிறுகதை முயற்சிகள்
காலகட்ட எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்பட்டே வந்திருக்கின்றன. 1960 களில் சிறுகதை
இலக்கிய முயற்சிக்குள் தம்மை ஈடுபடுத்திய கொத்தன் உருவாக்கிய இலக்கியச் சூழல் இன
உறவுப்பாலத்தை அவருள் அதிகம் விதைக்கத் தொடங்கியது. அவரது சிறுகதைகள்
தொடர்பில் பல்கலைக்கழக உள் நிலைகளிலும் சஞ்சிகைகள் மற்றும் ஆய்வு மாநாடுகள்
தரத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அவரது சிறுகதைகளில்
காணப்படும் இன உறவு பற்றியதான தனியான ஆய்வு முன்வைப்புக்கள் இடம்பெறவில்லை.
கொத்தனது சிறுதைகளில் இடம்பெறுகின்ற இன உறவினை வெளிப்படுத்தும் அம்சங்கள்,
சிறுகதைகள் பற்றிய திறனாய்வுப் பார்வைகள் போன்றவைகளே இவ்வாய்வின்
மூலகங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அவைகளின் அடிப்படையில் கொத்தனது
சிறுகதைகளினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இன உறவுக் கருத்துக்களை நுணுக்கமாகப்
பரிசீலிக்கின்ற முயற்சியாகவே ஆய்வு அமைந்துள்ளது.