dc.contributor.author |
அஸ்மியா, எம். ஏ. எஃப். |
|
dc.contributor.author |
கமலசிறி, வி. |
|
dc.date.accessioned |
2023-03-30T06:25:43Z |
|
dc.date.available |
2023-03-30T06:25:43Z |
|
dc.date.issued |
2022-06 |
|
dc.identifier.citation |
Kalam, International Research Journal, 15(1), June,2022. Faculty of Arts and Culture, SEUSL. pp.45-56 |
en_US |
dc.identifier.issn |
1391-6815 |
|
dc.identifier.issn |
2738-2214 |
|
dc.identifier.uri |
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6608 |
|
dc.description.abstract |
இலங்கையில் யுத்தத்திற்கு பின்னரான மீள் ஒருங்கிணைத்தல் செயன்முறையில் சமூக நல்லிணக்கம் என்ற கருத்தாடலானது முக்கியத்துவம் பெற வருகிறது. பொதுவாக சமூக நல்லிணக்கம்
என்பது வேறுபட்ட குழுக்களிடையே காணப்படும் வித்தியாசங்களைப் பொருட்படுத்தாமல்
இணங்கி வாழச் செய்வதை பற்றிய சிந்தனைகளை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. எனி
னும் யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது
என்பது சவாலான ஒன்றாகவே காணப்படுகின்றது. அந்தவகையில் இலங்கை மக்களுக்கிடையே
சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் செல்வாக்கு செலுத்தும் பல்வேறு காரணிகளுள் முக்கிய
காரணியாக மத கடும்போக்குவாதம் அடையாளப்படுத்தப்படுகின்றது. இது இலங்கையில் சமூக
நல்லிணக்கம் குறித்த பார்வையை சிக்கலான மற்றும் சவால் நிறைந்த ஒன்றாக மாற்றியுள்ளது.
எனவே இவ்வாய்வானது யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் மத கடும்போக்குவாதம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் சவால்களையும் குறித்து
ஆய்வு செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வகையில் இக்கட்டுரை பண்புரீதியிலான முறையியலின் அடிப்படையில் இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு விபரணப்பகுப்பாய்வு முறை ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வு முடிவுகளின்படி, யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் பௌத்த மதரீதியிலான கடும்போக்குவாத செயற்பாடுகள் வீரியமடைந்துள்ளதுடன், ஒரு சில குழுக்கள் இஸ்லாமிய மதரீதியி
லான தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமையினையும் அறியமுடிகிறது. இந்நிலைமையானது இலங்கை சமூகங்களுக்கிடையே காணப்படுகின்ற நம்பிக்கை, சகிப்புத்தன்மை மற்றும் நல்லுறவை பாதிப்புக்குட்படுத்துவதுடன் சமூகங்களுக்கிடையிலான சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கும் பெரும் சவாலாக அமைவதையும் இவ்வாய்வு வெளிப்படுத்தியுள்ளது. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts and Culture South Eastern University of Sri Lanka, University Park, Oluvil. |
en_US |
dc.subject |
பன்மைத்துவம் |
en_US |
dc.subject |
யுத்தம் |
en_US |
dc.subject |
மதகடும்போக்குவாதம் |
en_US |
dc.subject |
சமூகநல்லிணக்கம் |
en_US |
dc.subject |
சகிப்புத்தன்மை |
en_US |
dc.title |
இலங்கையில் மத கடும்போக்குவாதமும் சமூக நல்லிணக்கமும்: ஒரு விமர்சன நோக்கு |
en_US |
dc.type |
Article |
en_US |