Abstract:
கல்வி தொடர்பான தகவல்களை விநியோகிக்கும் மற்றும் அணுகும் முறைகள்
போன்றவற்றில் சமகால தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு
வழிவகுக்கின்றன. இணைய தொழில்நுட்ப கல்வி முறைகள் நேரடியாக கற்றல்
விளைவை ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில் இணைய கற்றல்கள் கற்றல்
ஊக்கிகளைத் தூண்டும் மற்றும் பராமரிக்கும் பணியையும் மேற்கொள்கின்றன.
தனிநபரின் முழுமையான வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கான ஒரு சிறப்பான
கருவி கற்றலாகும். பாரம்பரிய கற்றல் சூழல்களுடன் ஒப்பிடும்போது தொழில்நுட்ப
முன்னேற்றங்கள் மற்றும் இணையத்தை எளிதாக அணுகுதல் போன்ற விடயங்கள்
இணைய கற்றல் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளன. இணைய கற்றலாது
தொழில்நுட்பத்துடன் கற்றல் அனுபவங்களை வழங்குகிறது. இது அணுகல்,
இணைப்பு, நெகிழ்வுத்தன்மை மற்றும் கற்பவர்களிடையே தொடர்புகளை
ஊக்குவிக்கும் திறனை வழங்குகிறது. கற்றல் ஊக்கிகளின் நோக்கத்திற்கும் கற்றல்
செயற்திறனுக்கும் இடையிலான உறவுகள் வெளிப்படையானவை. இக் கட்டுரை
பிரதானமாக கருத்தியல் பகுப்பாய்வுடன் நூலக ஆராய்ச்சி முறையைப்
பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் இணைய கற்றலில் மாணவர்களின் கற்றல் ஊக்கிகள்
குறித்த இரண்டாம் நிலைத் தரவுகளாக கொண்டதாக அமைகின்றது. இக்கட்டுரை
முதலில் கற்றல் ஊக்கிகள் மற்றும் இணைய கற்றலுக்கான அதன் முக்கியத்துவத்தை
விளக்குகிறது. பின்னர் அதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை அடிப்படையாகக்
கொண்டு இணைய கற்றல் தொடர்பான விடயங்களை முன்மொழிகிறது. இதன் மூலம்
கற்றல் ஊக்கிகளைத் தூண்டவும் பராமரிக்கவும் முடியும்.