dc.description.abstract |
உலகளாவிய ரீதியில் அனர்த்தங்கள் மிக அதிகமாகவே இடம்பெற்று வருகின்றன.
இயற்கையாக மாத்திரமன்றி மானுட செயற்பாடுகளினாலும் பல்வேறு அனர்த்தங்கள்
ஏற்படுகின்றன. இவற்றை முகாமை செய்வதில் உயர்மட்ட நிறுவனங்கள் தொடக்கம்
கீழ்மட்டம் வரை அனைத்து நிறுவனங்களும் பங்கு கொள்கின்றன. அவ்வகையில்,
உள்ளூர் மட்ட நிறுவனங்களான உள்ளூராட்சி அரசாங்கம் மற்றும் பொதுத்துறை
நிர்வாகம் என்பவற்றின் பங்கும் முக்கியம் பெறுகின்றன. அதனடிப்படையில் கண்டி
மாவட்டத்தின் அக்குறணைப் பிரதேசத்தில் இரண்டு தசாப்த காலங்களுக்கு அதிகமாக
ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட
போதிலும், அவை பெருமளவு வெற்றிபெறவில்லை. அத்தோடு வெள்ளத்தைத் தடுக்க
அரச நிறுவனங்களான பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்தின் பங்களிப்பு குறித்த
கவனம் குறைவாகவே உள்ளது. ஆகவே வெள்ளத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து,
அதனைத் தடுப்பதற்கு பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் எவ்வாறான
முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளன எனவும், அவை ஏற்படுத்தியுள்ள
பிரதிபலிப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் எவை என்பன பற்றி
ஆராய்வதாகவும் இவ்வாய்வு அமையப்பெற்றுள்ளது. இவ் ஆய்வானது நேரடி
அவதானம், நேர்காணல்கள், பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்கள் என்போருக்கான வினாக்கொத்துக்கள் போன்ற முதலாம் நிலைத்
தரவுகளை சேகரித்தும், நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், பத்திரிகைகள், இணையவழித்
தகவல்கள் மற்றும் அறிக்கைகள் போன்ற இரண்டாம் நிலைத் தரவுகளைக் கொண்டும்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலம் வெள்ளத்திற்கான பல்வேறு காரணங்கள்
அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஆற்றில் மண்,
மணல் அகழ்வதற்கான பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை, ஆற்றை
சுத்தப்படுத்தல், சட்டவிரோத கட்டிடங்களுக்கு நடவடிக்கை எடுத்தல், குப்பை அகற்றும்
வழி முறைகளை ஏற்படுத்தல் போன்றன பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம்
என்பவற்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வளப்பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை,
முறையற்ற திண்மக் கழிவகற்றல், உயர்மட்ட அழுத்தங்கள், ஒத்துழைப்பின்மை
போன்றவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்த இந்நிறுவனங்களுக்கு தொடர்ந்தும் சவாலாக
உள்ளன. |
en_US |